உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவோம்: பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து அதிபர்கள் உறுதி!

உக்ரைனுக்கு  ஆயுதங்கள் வழங்குவோம்: பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து அதிபர்கள் உறுதி!
Published on

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவோம் என பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார் . மேலும் ரக்ஷய அதிபர் விளாடிமிர் புதின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் போர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. நேற்று உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக மற்றும் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் நேட்டோ மாநாடு குறித்தும் ஆலோசனை நடத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து அதிபர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மூன்று தலைவர்களின் இந்த சந்திப்பினில் அவர்கள் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதை உறுதி செய்தனர்.

உக்ரைன் கடந்த சில நாட்களுக்காக ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல முனைகளில் இருந்து தாக்குதல் நடத்துவால் ரஷியப் படைகள் சில இடங்களில் திணறி வருகிறது. இதனால் ஏழு கிராமங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

pudin
pudin

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இது குறித்து கூறுகையில் ''இந்த எதிர்தாக்குதல் பல மாதங்கள் இல்லாவிட்டாலும், பல வாரங்கள் நடைபெறலாம். போர் தொடங்கியபோது, நாங்கள் வரையறுத்த எல்லைக்குள் எல்லாவற்றையும் செய்துள்ளோம். வரும் நாட்களில், வாரங்களில் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், ராணுவ வாகனங்கள் வழங்கப்படும். இந்த எதிர்தாக்குதல் வெற்றிகரமாக இருக்க வேண்டும். அதன்மூலம் புதின் உடன் பேச்சுவார்த்தை தொடங்க முடியும் என பிரான்ஸ் நம்புகிறது'' எனத் தெரிவித்தார்.

போலந்து அதிபர் டுடா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி , ''எங்களுடைய ஆதரவுடன் இந்த எதிர்தாக்குதலில் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் ''இந்த போரில் தனது திட்டம் தோல்வியடைந்து விட்டது, 16 மாதங்களாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புதின் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அவர் துருப்புகளை திரும்பப் பெற்று இறுதியாக நியாயமான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்'' என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com