

சித்திரை வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வரும் வேளையில் மக்கள் அதிக அனல் அடிக்கும் நேரங்களில் வெளியில் வராமல் தங்களை தற்காத்துக் கொள்ளுமாறு வானிலை மையமும் சுகாதார துறையும் அவ்வப்போது எச்சரிக்கை தந்து கொண்டே இருக்கும் நிலையில் தற்போது வானிலை மையத்தின் அறிவிப்பு இது.
ஏப்ரல் 19 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை தந்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கக்கூடும். ஏப்ரல் 21 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 21 வரை டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு எனவும் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் 19 வரை உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் இன்றைய வானிலை ஆய்வுகள் கூறுகிறது.