சீன ஆன்ட்ராய்ட் ஆப்களுக்கு ஆப்பு; சீனாவுக்கு எதிரான இந்தியாவின் இணைய வழி யுத்தம் தொடர்கிறது!

சீன ஆன்ட்ராய்ட் ஆப்களுக்கு ஆப்பு; சீனாவுக்கு எதிரான இந்தியாவின் இணைய வழி யுத்தம் தொடர்கிறது!

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை புதிதாக 232 ஆண்ட்ராய் ஆப் செயலிகளை தடை செய்வதாக அறிவித்திருக்கிறது. இதில் பெரும்பாலான ஆண்ட்ராய் ஆப், ஆன்லைன் சூதாட்டம், பெர்ஸனல் லோன் தந்து மக்களை மோசடி செய்து வந்ததால் தடை செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்க வைக்கும் ஆன்ட்ராய் ஆப் ஏராளமாய் கொட்டிக் கிடக்கின்றன. இது தவிர சாமானியர்களை குறித்து வைத்து, குறைந்த வட்டி விகிதத்தில் தனி நபர் லோன் தருவதாக ஏராளமான ஆன்ட்ராய் ஆப் சந்தையில் இலவசமாக கிடைக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை சீனாவிலிருந்து இயங்குபவை அல்லது சீனர்களின் பின்னணியை கொண்டிருப்பதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வந்தன. மத்தி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்த பரிந்துரையின் அடிப்படையில் ஏறக்குறைய 232 செயலிகளை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை நேற்று தடை செய்திருக்கிறது.

இதில் 138 செயலிகள் ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தப்பட்டவை. 94 செயலிகள் அங்கீகரிக்கப்படாத கடன்கள் வழங்குவதாக மோசடி செய்யும் நோக்கத்தோடு செயல்படுபவை. இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குலைக்கும் நோக்கத்தில் இந்தியாவுக்கு வெளியிலிருந்து செயல்பட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

கொரானா தொற்று பரவலுக்கு முன்னரே எல்லை விஷயத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல் எழுந்தது. கொரானா தொற்று பரவலின் காரணமாக எல்லை பிரச்னை பரபரப்பாக பேசப்படாவிட்டாலும், இணையம் மூலமாக மோதல்கள் தொடர்ந்து இருந்து வந்தன.

கடந்த மூன்று ஆண்டுகளில் எராளமான சீனா செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. டிக்டாக், வீ சாட் உள்ளிட்ட இந்தியர்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்த செயலிகள் கூட தடை செய்யப்பட்டன.

சமீபத்தில் தடை செய்யப்பட்ட 232 ஆப்களை தொடர்ந்து இன்னொரு பட்டியலும் தயாராகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால், எந்தெந்த ஆப் இதுவரை தடை செய்யப்பட்டிருக்கின்றன பற்றிய விபரத்தை வெளியிட தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com