
உடல் எடையைக் குறைக்க என்னவெல்லாம் செய்றோம்? டயட், எக்சர்சைஸ், சில சமயம் ஜிம்முக்குக்கூட போறோம். ஆனா, இதெல்லாம் இல்லாம, ஒரு ஊசி போட்டா போதும், சாப்பிடுற சாப்பாட்டோட சுவையே மாறிடுமாம் - இப்படி ஒரு சுவாரஸ்யமான தகவல் புதிய ஆய்வில் தெரியவந்திருக்கு.
Ozempic, Wegovy, Mounjaro போன்ற நவீன மருந்துகள் உடல் எடையைக் குறைக்கப் பயன்படுது.
இந்த மருந்துகளால், சிலருக்கு உணவின் சுவை இனிப்பாகவோ அல்லது உப்பாகவோ மாறுவதா ஆய்வில் பங்கேற்றவர்கள் சொல்லியிருக்காங்க.
கிட்டத்தட்ட 20% பேர் அப்படி உணர்வதாகவும், இது பசியைக் கட்டுப்படுத்த உதவுவதாகவும் விஞ்ஞானிகள் சொல்றாங்க.
டேஸ்ட் மாறுறதுக்கு என்ன காரணம்?
"இந்த மருந்துகள் நம்ம குடல்ல மட்டுமில்லாம, சுவை உணர்வைப் புரிந்துகொள்ளும் மூளையின் பகுதிகளிலும், நாக்கில் உள்ள சுவை மொட்டுகளிலும் (taste buds) வேலை செய்யுது.
அதனால இனிப்பு, உப்பு சுவைகள் மாறுபடுற மாதிரி தோணுது. இதுவே பசியைக் கட்டுப்படுத்த ஒரு காரணமாக அமையலாம்" என ஆய்வை நடத்திய பேராசிரியர் மோசர் தெரிவிச்சிருக்காரு.
இந்த மருந்துகளைப் பயன்படுத்திய பலருக்கு, அந்த 'Food Noise' சத்தம் குறைஞ்சிருச்சுன்னு வேற ஒரு ஆய்வு சொல்லுது.
ஆரம்பத்துல 62% பேருக்கு இருந்த இந்த தொந்தரவு, மருந்துப் பயன்பாட்டுக்கு அப்புறம் வெறும் 16% ஆகக் குறைஞ்சிருக்கு.
அப்போ சாப்பாட்டு நினைப்பே இல்லன்னா எப்படி வெயிட் கூடும்?
இந்த மருந்துகள் உடல் எடையைக் குறைக்க ஒரு புது வழியைக் காட்டுனாலும், அது மட்டுமே முழுமையான தீர்வு இல்லைன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க.
உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்ற விஷயங்களும் ரொம்ப முக்கியம்னு அவங்க வலியுறுத்துறாங்க.
கூடுதலாக, இந்த மருந்துகள் உடலில் GLP-1 என்ற ஹார்மோனைப் போல செயல்படுகின்றன.
இது பசியைக் குறைத்து, வயிறு நிறைந்த உணர்வை நீட்டிக்கிறது. இதன் காரணமாக, மக்கள் குறைவாகச் சாப்பிடுகின்றனர்.
சுவை மாற்றம் மற்றும் பசி குறைவு இரண்டும் இணைந்தே இந்த மருந்துகளின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
"எடை குறைப்புக்கு இது புது ஸ்டார்ட். ஆனால், முழுப் பயணமில்லை"
எதிர்காலத்தில் என்ன நடக்கும்....அதைப் பொறுத்து இருந்துதான் பார்க்கணும்.