நடுவானில் தள்ளாடிய ஹெலிகாப்டர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!

நடுவானில் தள்ளாடிய  ஹெலிகாப்டர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நடுவானில் தள்ளாடிய ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம் அடைந்துள்ளார். கனமழை காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் வடக்கு வங்காளத்தில் உள்ள ராணுவ விமான தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கிராமப்புற தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மம்தாவிற்கு முதுகு மற்றும் முழங்காலில் சிறிய காயம் ஏற்பட்டது, மேலும் அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பஞ்சாயத்து கூட்டத்திற்குப் பிறகு மேற்கு வங்க முதல்வர் பக்தோக்ராவிலிருந்து ஜல்பைகுரிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். கனமழை காரணமாக வடக்கு வங்காளத்தின் சலுகாராவில் உள்ள ராணுவ விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது இந்த சம்பவம் நடை பெற்றது.

பைகுந்தபூர் வனப்பகுதியில் பறக்கும்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கிய போது தான் மம்தாவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சிலிகுரி அருகே செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட போது மம்தா பானர்ஜிக்கு இடுப்பு மற்றும் கால்களில் காயம் அடைந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com