பெண்ணாக இருந்து ஆணாக மாறிய பிரபல முதலமைச்சரின் மகள்!

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய பிரபல முதலமைச்சரின் மகள்!

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மகளான சசேத்னா பட்டாச்சார்யா தன்னுடைய பாலின அடையாளத்தை ஆணாக மாற்றிக்கொள்ள அறுவை சிகிச்சை  செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாற்று பாலினத்தவர்களுக்கான LGBTQ கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மகளான சசேத்னா பட்டாச்சார்யா, “பிறப்பில் ஒரு பெண்ணான நான், உடல் அளவிலும் மனதளவிலும் என்னை எப்போதும் ஒரு ஆணாக அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறேன். என் பிறப்பின் அடையாளமே அல்லது என் குடும்பத்தினர் மீதான சமூகத்தின் பார்வையோ எனக்கு பெரிய விஷயமல்ல. நான் என்னுடைய பாலினத்தை எந்த காரணத்திற்காகவே மறைக்கவிரும்பவில்லை. ஒரு திருநம்பியாக நான் தினமும் சந்திக்கும் சமூக துன்புறுத்தலை நிறுத்த விரும்புகிறேன். எனது LGBTQ இயக்கத்தின் ஒரு பகுதியாக நான் என்னை ஒரு ஆணாக இந்த உலகத்தில் பிரகடனப்படுத்திக்கொள்வதில்  எந்தவித சங்கடமும் எனக்கு இல்லை.

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்வின் மனைவி, மகள் சசேத்னா பட்டாச்சார்யா
மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்வின் மனைவி, மகள் சசேத்னா பட்டாச்சார்யா

எனக்கு தற்போது 41 வயதாகிறது. இப்போது என் வாழ்க்கை தொடர்பான அனைத்து முடிவுகளையும் நானே எடுக்க முடியும். நான் சிறுவயதில் இருந்தே என்னை ஒரு ஆண் பிள்ளையாகத்தான் உணர்ந்து வளர்ந்துள்ளேன். என்னுடைய பாலின மாறுபாடு என் குடும்பத்தினர் அனைவருக்கும். உடலளவிலும் மனதளவிலும் நான் ஒரு ஆணாக இருப்பது என்னுடைய தந்தைக்கு முன்பே தெரியும். இந்த விவகாரத்தில் தயவு செய்து என் பெற்றோரை இழுக்காதீர்கள். நான் மனரீதியாக என்னை ஆணாகக் கருதுவதை தற்போது உடல் ரீதியாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன், இதற்காக நான் மேற்கொள்ளவுள்ள அறுவை சிகிச்சைக்கு

தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெற்றுவருகிறேன்.பெண் உடல் அமைப்பில் இருந்து ஒரு ஆணாக மாற்றிக்கொள்ள நினைக்கும் என்பது நான் எடுத்த முடிவு. இதற்காகப் பல ஆண்டுகள் யோசித்துத்தான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். உடல் அமைப்பு ரீதியாக பெண்ணாகவும், மனரீதியாக ஆணாகவும் இத்தனை ஆண்டுக்காலம் நான் வாழ்ந்த வாழ்க்கை விவரிக்க முடியாத வலிகளைக் கொண்டது. நான் தற்போது எடுத்துள்ள இந்த முடிவு எந்த ஆட்சேபனை வந்தாலும் அதனை எதிர்த்து போராடுவேன். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று சுசேதனா கூறினார்.

சசேத்னா பட்டாச்சார்யா
சசேத்னா பட்டாச்சார்யா

மேலும், இந்த செய்தியை ஊடகங்கள் திரித்துக் கூறவேண்டாம் என்றும் இது என்னுடைய சொந்தப் போராட்டம். இதை நான் தனியாக எதிர்த்துப் போராட விரும்புகிறேன். எப்போதும் இல்லாததை விடத் தாமதமாகிவிட்டது. என் குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு இந்த நோக்கு நிலை இருந்தது. இதற்குப் பலர் ஆதரவு தெரிவித்ததுடன், பலர் அதிருப்தி அடைந்தனர். மனரீதியாக, நான் ஒரு டிரான்ஸ்-மேன், மற்றும் உடல் ரீதியாக, நான் அப்படியே இருக்க விரும்புகிறேன். எல்லோரையும் தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை என் பெயருக்கும் என் பெற்றோருக்கும் ஏதாவது சர்ச்சையில் சிக்கவைக்க யாராவது நினைக்கலாம். ஆனால் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். LGBTQ சமூகத்தை தைரியமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com