எவ்வளவு பெரிய நாக்கு…. கின்னஸ் சாதனைப்படைத்த நாய்!

Joey dog
Joey dog
Published on

அமெரிக்காவில் உள்ள லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர் – ஜெர்மன் ஷெப்பர்ட் கலப்பினத்தில் பிறந்த நாள் உலகிலேயே மிக நீளமான நாக்கினை கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.

ஜோயி நாயின் நாக்கு 12.7 சென்டி மீட்டர் நீளத்தை கொண்டுள்ளது. இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் 9.49 செ.மீ நீளமான நாக்கு கொண்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், பிஸ்பீயின் சாதனையை ஜோயி நாய் முறியடித்துள்ளது. இதுகுறித்து பேசிய நாயின் உரிமையாளர், ஜோயி ஆறு வாரமாக இருக்கும்போது நாங்கள் அதனை வாங்கினோம். குட்டியாக இருக்கும்போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியே வரும், ஆனால், ஜோயி வளர வளர அதனுடைய நாக்கும் இவ்வளவு நீளத்திற்கு வளரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றனர்.

அதேபோல் நீளமான நாக்குடன் ஜோயி வெளியே நடைபயிற்சிக்காக செல்லும்போது, அதனுடைய நாக்கின் நீளத்தை கண்டு பலர் ஜோயின் அருகில் வர நினைப்பார்கள், ஒரு சிலர் ஜோயி தூரத்தில்வரும்போதே அதனுடைய தோற்றத்தை கண்டு ஓரமாக சென்றுவிடுவார்கள். உரிமையாளர்களுடன் குழந்தை போல் விளையாடும் ஜோயி,யாராவது அறிமுகமில்லாத நபர்கள் வந்தால் ஆக்ரோஷமாக காணப்படுமாம். மருத்துவ சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனை அழைத்து சென்றபோது, ஜோயி நாக்கை கால்நடை மருத்துவர் அளந்ததை தொடர்ந்து அதனுடைய நாக்கு மிக நீளமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com