இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் பியூட்டி ஃபிலடர் வசதி அடுத்த வருடம் முதல் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமை மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து நார்மல் கேமராவையே மறக்கும் அளவிற்கு இன்ஸ்டாகிராமில் புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். என்னத்தான் ஸ்னாப்சாட் போன்ற செயலிகள் வந்தாலும், அதை எதற்கு தனியாக இன்ஸ்டால் செய்து இடத்தை அடைத்துக்கொண்டு, அதான் இன்ஸ்டா இருக்கிறதே என்று மக்கள் மனதை நிறைவாக வைத்துக்கொண்ட ஒன்று இன்ஸ்டா பியூட்டி ஃபில்டர்ஸ்.
இதன்மூலம் போட்டோ எடுத்துக்கொண்டு அழகழகாக பதிவிட்டு வந்தனர். ஆனால், சிலர் இதனை வெறுத்தனர். இயற்கையாக எடுக்கும் போட்டோவை ஒப்பிடும்போது இந்த ஃபில்டர்ஸ் போட்டோ சிலருக்கு பிடிக்கவே இல்லை. உண்மையான நிறம், வடிவம் போன்ற அனைத்தையும் மாற்றி அழகாக காண்பிக்கும் ஃபில்டரை எதற்கு நாம் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி சிலருக்கு இருந்துதான் வருகிறது.
அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் உள்ள பியூட்டி ஃபில்டர்ஸை நீக்க மெட்டா முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில், இந்த அம்சம் ஜனவரி 2025 முதல் முற்றிலும் நிறுத்தப்படும் என மெட்டா அறிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு ஆக்மென்டட் ரியாலிட்டி பியூட்டி ஃபில்டர்கள் இனி இன்ஸ்டாகிராமில் தோன்றாது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பயனர்களால் உருவாக்கப்பட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபில்டர்கள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை மெட்டா எடுத்ததற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. இன்ஸ்டாகிராம் நடத்திய ஆய்வில் இது குறித்த சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில், பியூட்டி ஃபில்டர்கள் கொண்ட இந்தப் படங்கள் பெண்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. பியூட்டி ஃபில்டர்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யதார்த்தத்திலிருந்து மிகவும் வேறுபட்டவை என்றும் சொல்லப்படுகிறது.
புகைப்படத்தை பதிவிடும் போது மூன்றாம் தரப்பு பியூட்டி ஃபில்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் புகைப்படத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றலாம். இது எப்போதும் உண்மைக்கு அப்பாற்பட்டது என பலர் குற்றம் சாட்டி வருகினறனர். இந்த பில்டர்களை பயன்படுத்தி தன்னை அழகாகக் காட்டி பதிவிட்டு வந்த மக்கள் இந்த செய்தியால் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.