நாகாலாந்து அமைச்சரை பாராட்டி பிரதமர் மோடி பேசியது என்ன?

நாகாலாந்து அமைச்சரை பாராட்டி பிரதமர் மோடி பேசியது என்ன?

அவரது கருத்துக்கள்...

நாகாலாந்தில் உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் டெம்ஜென் இம்னா அலோங். மாநிலத்தின் பா.ஜ.க. தலைவரும் இவர்தான். சமூக வலைத்தளங்களில் தமது கருத்துகளை பதிவிடுவதில் பிரபலமானவர். அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையிலும் வித்தியாசமான தனது கருத்துக்களால் நெட்டிஸன்களுக்கு கலகலப்பு ஏற்படுத்தி வருபவர். வாழ்க்கைக்கு தேவையான அறிவுரை, தனது சொந்த வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் மாநிலத்தின் சிறப்புகளை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிஸன்களை ரசிக்க வைக்கிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாகாலாந்தில் உள்ள திமாபூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சியைச் சேர்ந்தவரும் அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலோங்குக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிடும் கருத்துகள் வடகிழக்கு மாநில மக்களின் வார்த்தைகளாக வெளிஉலகிற்கு எதிரொலிப்பதாக பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். பா.ஜ.க. தலைவரான டெம்ஜென் இம்னாவின் கருத்துக்கள் நாடு முழுவதும் எதிரொலிக்கின்றது. மக்கள் அவரது பேச்சை ரசிக்கிறார்கள் என்று கூறியவுடன் கூட்டத்தினர் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

அவர் நாகாலாந்தைச் சேர்ந்தவர் என்றாலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் வடகிழக்கு மாநிலங்களையே பேச்சு மூலம் அசத்துகிறார். அவரது பதிவேற்றங்களை நான்கூட பார்த்து ரசிப்பதுண்டு என்று பிரதமர் கூறினார்.

பா.ஜ.க.வுக்காக தேர்தல் பிரசாரம் செய்து வரும் அலோங், தாம் செல்லும் இடங்களில் எல்லாம் பிரதமர் மோடியின் பேச்சுகளை மறுபதிவிட்டு வருகிறார். பிரதமர் பேசத் தொடங்குவதற்கு முன், “ மாநிலத்தில் “குருஜி” (பிரதமர் மோடி) இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டு பா.ஜ.க. ஸ்கார்ப் அணிந்தவாறு புன்னகையுடன் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் பேசுகையில், “காங்கிரஸ் வடகிழக்கு மாநிலத்தை பணம் கொழிக்கும் இடமாக மட்டுமே பார்த்துவந்துள்ளது. பா.ஜ.க.தான் 8 மாநிலங்கள் அடங்கிய வடகிழக்கு மாநிலங்களை அஷ்டலெட்சுமியாக பார்ப்பதுடன் அங்கு அமைதி மற்றும் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறது.

வடகிழக்கில் காங்கிரஸ் பிரிவினை அரசியலையே நடத்தி வந்துள்ளது. ஆனால், நாங்கள் பாகுபாடு பார்க்காமல் நல்லாட்சி நடத்தி வருகிறோம். அமைதி, முன்னேற்றம், வளர்ச்சி இவைதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் தாரக மந்திரம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com