சூரியனின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து அசத்திய சீனா!

suriyan
suriyan
Published on

சீனா ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு உள்ளது. சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்ற வீடியோ காட்சிகளை சீனா வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Suriyan
Suriyan

சீனாவின் அறிவியல் அகாடமி கடந்த அக்டோபர் மாதம் ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. சூரியனை ஆய்வு செய்யும் வகையில் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை கொண்டு சீனாவின் சூரிய ஆய்வகம் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

இதனை தவிர சீனாவின் சுங் என்ற இடத்தில் செயற்கை சூரியனை தயாரித்து வருகிறது சீனா அரசு. இதனை உருவாக்க 2006-ஆம் ஆண்டு ஆராய்ச்சிகளை துவங்கிய சீனா தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com