16 வயதில் கட்டாய திருமணம் அதுவும் முன்னேறிய நாடுகள் மற்றும் நவநாகரிக பகுதிகள் என்று பெருமையாக சொல்லப்படும் தெற்காசியா மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் என்பதை நம்பமுடிகிறதா? ஆனா நம்ப தான் வேண்டியிருக்கிறது...
உலகெங்கும் திருமண வயது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுவது வாடிக்கை தான். அந்த வகையில் இங்கிலாந்தில் தற்போது திருமணம் செய்ய வயது வரம்பு கட்டாயமாக 18 வயதிற்கு மேலே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது.
இந்தியாவில் முற்காலத்திலிருந்து இளமையில் திருமணம் செய்வது என்பது சாதீய, மத வழக்கங்களாக கருதப்பட்டது. பால்ய விவகங்கள் ஒழிக்கப்பட்டு சட்ட பூர்வமாக திருமண வயது 18 ஆக அதிகரித்து பல ஆண்டுகளாகிறது. அந்த சட்டங்களும் தற்போது மாற்றமடைந்து சட்ட பூர்வமாக திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு பலவேறு தரப்பிலிருந்து ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது.
இந்த நிலையில் பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் திருமணம் செய்து கொள்வதற்கான வயது வரம்பு 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது உலகெங்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இங்கிலாந்திலும் கட்டாய கல்யாணங்களா என்பது வியப்பு தரக்கூடிய நிகழ்வு தானே!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18. ஆனால், பெற்றோர் சம்மதத்துடன் 16 வயதுடையவர்கள் திருமணம் செய்துகொள்ள இதுவரை அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.இதனால் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்வதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தெற்காசியா மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கட்டாய திருமணங்கள் நடத்திய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, திருமணம் செய்து கொள்வதற்கான திருமண வயது வரம்பு 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்