கடத்தல்காரன் சுபாஷ் கபூர் கடத்திய பொருட்களின் இன்றைய கதி என்ன?


கடத்தல்காரன் சுபாஷ் கபூர் கடத்திய பொருட்களின் இன்றைய கதி என்ன?
Published on

மிழ்நாட்டு சிறையில் இருக்கும் பிரபல கடத்தல்காரன் சுபாஷ் கபூருடன் தொடர்புடைய குறைந்தது 77 தொல்பொருட்கள் நியூயார்க் MET அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்திற்கு சமீபத்தில் தேடல் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, 15 பழங்கால பொருட்கள் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'அப்சரா' என்ற சிற்பமும், மேலும் மேற்கு வங்காளத்தின் கிமு ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'யாஷி டெரகோட்டாவும்' அடங்கும்.

கடந்த மார்ச் 22ஆம் தேதி நியூயார்க் உச்ச நீதிமன்றம் MET அருங்காட்சியகத்திற்கு எதிராக ஒரு தேடல் வாரண்ட் பிறப்பித்திருந்தது. இதில் பத்து நாள் அவகாசம் அளிக்கப்பட்டு, பழங்காலப் பொருட்களைக் கைப்பற்றி, எந்த கால தாமதமும் இன்றி உடனடியாக நீதிமன்றம் முன்பாக ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டார்கள். 

இதைத் தொடர்ந்து மார்ச் 30ஆம் தேதி MET சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. "இந்த படைப்புகள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வந்ததை அறிந்த பிறகு, 15 சிற்பங்களை இந்திய அரசிடமே திருப்பியளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் தற்போது சிறைதண்டனை அனுபவித்து வரும் சுரேஷ் கபூர் என்ற வியாபாரியிடம் இந்த அனைத்து படைப்புகளையும் நாங்கள் வாங்கினோம்" என்று கூறியிருந்தனர். 

தேடுதல் வாரண்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ள 15 இந்திய தொல்பொருட்களின் மதிப்பு 1.201 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 9.87 கோடியாகும். இந்த பொருட்கள் திருடப்பட்டவை என்றும் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பது அமெரிக்க தண்டனைச் சட்டத்தின் கீழ் தவறு மற்றும் குற்றங்களை செய்ய துணை நிற்பது போன்ற குற்றங்களுக்கு ஆதாரமாக இருப்பதாகவும் தேடுதல் வாரண்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் சந்தேகத்திற்குரிய வியாபாரிகளிடமிருந்து பழங்கால பொருட்கள் வாங்கப்பட்டு அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதும் தீவிர மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அரசாங்கத்துடனான நீண்ட கால உறவுகளை மதிப்பதாலேயே பழங்கால பொருட்களை திருப்பி அனுப்பும் முடிவை MET எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, கபூரை "உலகின் மிகவும் வளமான பொருட்களைத் திருடும் கடத்தக்காரர்களில் ஒருவர்" என்றும் விவரித்துள்ளது. 

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 'சுபாஷ் கபூர்' என்பவன் தற்போது தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில், பழங்கால பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com