இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் நிலை என்ன?

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் நிலை என்ன?
Published on

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போதைய நிதியாண்டில் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில்துறையை முற்றிலும் முடக்கியது. அந்த நேரங்களில் பொருளாதார சரிவு, உற்பத்தி குறைவு, வேலையில்லா திண்டாட்டம் பேன்றவை அதிகரித்தது. மேலும் பல தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தின் காரணமாக மூடும் நிலைக்குச் சென்றன.

கொரோனாவுக்குப் பிறகான நிதியாண்டுகளில் வளரும் நாடுகளிலும், வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் பல மாற்றங்கள்ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நாடுகளினுடைய தொழில் நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சி போக்கை அடைந்து வருகின்றன. இது கொரோனா காலத்தில் இருந்ததற்கு நேர் எதிரான நிலை என்று சர்வதேச தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவினுடைய தொழில்துறை கொரோனாவுக்கு பிரகான நிதியாண்டுகளில் தொடர் வளர்ச்சி கண்டு வருவதாக தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசியப் புள்ளிகள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2020- 2021 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 135.58 லட்சம் கோடியாக இருந்து, இது 6.6 சதவீதம் வீழ்ச்சியாகும். பிறகு 2021 - 2022ம் ஆண்டுகளில் 147.36 லட்சம் கோடியாக உயர்ந்து, 8.7 சதவீதம் வளர்ச்சி கண்டது. அதன் பிறகு 2022 - 2023 நிதியாண்டும் வளர்ச்சியின் பாதையிலே அமைந்தது.

தற்போது 2023 - 2024 ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் இந்திய தொழில்துறை அதிகப்படியான உற்பத்தியை மேற்கொண்டு இருக்கிறது. இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுகளை விட இந்த நிதியாண்டின் காலாண்டு பகுதியிலேயே மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக இந்தியா 5.7 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாகவும், சுரங்க உற்பத்தியில் 6.4 சதவீத வளர்ச்சியும் அடைந்திருப்பதாகவும், அதில் மின்சார உற்பத்தியில் 0.9 சதவீத வளர்ச்சியும் பெற்றிருப்பதாகவும், விவசாயத் துறையில் 5.5 சதவீதம், கட்டுமான துறையில் 10.4 சதவீதம், வணிகம், போக்குவரத்து, ஹோட்டல் போன்ற துறைகளில் 9.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கடந்த நிதியாண்டில் 7.2 சதவீத ஜிடிபி உடன் முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போதைய நிதியாண்டிலும் அதே இடத்தை தக்க வைக்கும். இந்தோனேசியா 5.3 சதவீத ஜிடிபி உடன் 2வது இடத்திலும், பிரிட்டன் 4.1% ஜிடிபி உடன் 3வது இடத்திலும், சீனா 3.1 சதவீத ஜிடிபி உடன் 4வது இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தில் இருப்பதால் இந்தியாவினுடைய உள்நாட்டு சந்தை விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்து இருக்கிறது. மேலும் நேரடி வரியான வருமான வரி 2.5 சதவீதமும், மறைமுக வரியானா ஜிஎஸ்டி 5.1 லட்சம் கோடியும் அதிகரித்து இருக்கிறது.

2021 - 2022 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தனி நபர் வருமானம் 92,584 என்று இருந்தது. பிறகு உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க தொடங்கியதால் 2022 - 2023 ஆண்டுகளில் தனிநபர் வருமானமும் 98,374 என்று அதிகரித்துள்ளது. இது தற்போதைய நிதியாண்டில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com