தலித்துகள், முஸ்லிம்கள் குறித்து ராகுல் கூறியது கசப்பான உண்மை: மாயாவதி!

தலித்துகள், முஸ்லிம்கள் குறித்து ராகுல் கூறியது கசப்பான உண்மை: மாயாவதி!
Published on

நாட்டில் தலித்துகளும் முஸ்லிம்களும் மோசமான நிலையில் பாதுகாப்பின்றி உள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளது கசப்பான உண்மை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.எனினும் இந்த நிலைக்கு மத்தியில் முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசும் மற்றும் தற்போதைய பா.ஜ.க. அரசுமே முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அங்கு அமெரிக் க வாழ் தமிழர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்கைகழக பேராசிரியர்களிடம் உரையாற்றினார்.

அப்போது இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் பா.ஜ.க. ஆட்சியில் அவர்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ கட்சித் தலைவர் மாயாவதி, தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் இந்தியாவில் மோசமாக நடத்தப்படுகின்றனர், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளது கசப்பான

உண்மையாகும். எனினும் இதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அரசுகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறினார்.

மாநிலங்களில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி… பா.ஜ.க. ஆண்டாலும் சரி இதே நிலமைதான். குறிப்பாக உ.பி.இல் தலித் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். பகுஜன் சமாஜ் ஆட்சியில் இருந்தபோதுதான் சட்டப்படியான ஆட்சி நடந்தது. அனைவருக்கும் நீதி கிடைத்தது. அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயத்துக்காக வகுப்பு மோதல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்றார் மாயாவதி.

அடுத்து வரும் நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவது உறுதி. பா.ஜ.க. காணாமல் போய்விடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். மேலும் முஸ்லிம் லீக் கட்சி மதச்சார்பற்ற கட்சியாகும். அதை மதச்சார்புள்ள கட்சி என்று கூறமுடியாது. மதச்சார்பற்ற தன்மையால்தான் அதனுடன் கேரளத்தில் காங்கிரஸ் கூட்டு வைத்துள்ளது என்றும் ராகுல் கூறியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com