முன்னாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என கூறியதற்காக பத்திரிகையாளர் பிஸ்மியின் அலுவலகத்திற்கு சென்ற ரஜினி ரசிகர்களுக்கு பலரம் தங்களது கண்டனங்களை குவித்து வருகிறார்கள்.
ரஜினியின் சாதனைகளை பட்டியலிட்டு அன்றும் இன்றும் என்றும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் 10 பேர் பத்திரிகையாளர் பிஸ்மியின் வீட்டுக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ரஜினி குறித்து யூடியூப்பில் அவர் பேசிய காணொலிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் சிலர் பிஸ்மியின் செயலை கண்டித்தும் ட்வீட் போட்டுள்ளார்கள்.
முன்னதாக வாரிசு பட ரிலீஸ் விவகாரத்தில் தமிழகத்தில் விஜய்தான் நம்பர் 1 நடிகர், அஜித் அடுத்த இடத்தில்தான் இருக்கிறார் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தான் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி இது குறித்து ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார். இதை தில் ராஜு சொல்ல வேண்டும் என்றில்லை. மக்கள் விஜய்யை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இது ரஜினியின் ரசிகர்களிடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தி யுள்ளது. இதன் காரணமாக ரஜினியின் ரசிகர்கள் சிலர் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி அவர்களது அலுவலகத்திற்குச் சென்று வாக்கு வாதம் செய்து அச்சுறுத்தலில் ஈடுபட்டனர்.
திரைத்துறையில் யார் முன்னணி? என்பது குறித்தான தனது மதிப்பீட்டை பதிவு செய்ததற்காக மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி அவர்களது அலுவலகத்திற்குச் சென்று அச்சுறுத்த முனைந்த ரஜினி ரசிகர்களின் செயல் அற்பத்தனமானது! வன்மையானக் கண்டனத்திற்குரியது!
முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்த் அவர்களை குறிப்பிட்டதற்காக ஊடகவியலாளர் பிஸ்மி அவர்களின் அலுவலகம் சென்று மிரட்டும் தொணியில் பேசியுள்ள ரஜினிகாந்த்தின் ரசிகர்களுடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பிஸ்மி அவர்கள் குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை என்று சக பத்திரிக்கை நண்பர்கள் பலர் பிஸ்மிக்கு ஆதரவாக பதிவிட்டு வருவது திரையுலகில் பரபரப்பை கிளறி வருகிறது.