

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏதோ ஒரு காரணத்தால் நமது பெயர் வாக்காளர் பட்டியல்லில் இல்லையென்றால், அதன் காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் தெளிவாக ஒட்டப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6.41 41 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இவர்கள் இடம்பெற்ற வாக்காளர்கள் பட்டியலில் தீவிர சரிபார்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக மொத்தம் 68470 பிஎல்ஓக்கள் உட்பட2045340 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாடு முழுவதும் அதிக பிஎல்ஓக்கள் தமிழகத்தில் தான் செயல்பட்டு வருகின்றனர். மேலும் 33000 தன்னார்வலர்களும் இவர்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இதுவரை வாக்காளர்களிடம் சென்றுள்ள6.16 கோடி படிவங்களில் பாதி படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. 2.59 கோடி படிவங்கள் கணினி முறையில் உள்ளீடும் செய்யப்பட்டுள்ளன. 327 பிஎல்ஓக்கள் தங்கள் பணியை முழுமையாக முடித்துள்ளனர். சென்னையில் 96% படிவங்கள் வழங்கப்பட்டு, 50% திரும்ப பெறப்பட்டு, 30% ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக 2 லட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமைக் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும், அவர்களால் முடிந்த தகவல்களை மட்டும் அளித்தால், மீதித் தகவல்களை தன்னார்வளர்கள் நிறைவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தவறான தகவல் அல்லது ஆதாரம் இல்லாமல் பெயர் நீக்கப்படாது, இறப்பு வீட்டு மாற்றம் நிரந்தர இடமாற்றம் இரட்டை வாக்குரிமை அல்லது படிவம் சமர்ப்பிக்காமை ஆகிய காரணங்களில் ஏதேனும் இருந்தால் மட்டுமே பெயர் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சரிபார்க்க கடைசி நாள் டிசம்பர் 4 அம் தேதியாகும். தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் பெயரைச் சேர்ப்பதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய இரண்டு வழிமுறைகள் உள்ளன.
1. தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (National Voters' Service Portal - NVSP) அல்லது Voters Helpline App மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
2. படிவம் 6 (Form 6): வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விரும்பும் ஒரு புதிய வாக்காளர் அல்லது ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு இடமாற்றம் செய்தவர் பயன்படுத்தும் படிவம் இது தான். நீக்கப்பட்ட பெயரை மீண்டும் சேர்க்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டுமெனில், அதற்காகப் பயன்படுத்தப்படுதுத்துவது படிவம் 7 (Form 7) அஆகும். ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு வாக்காளரின் பெயரை நீக்கக் கோருவதற்கு அல்லது நீக்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்க இந்தப் படிவம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் குறிப்பிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR), அதன் நோக்கங்களின் காரணமாக ஆதரவையும், செயல்படுத்தப்படும் முறைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த அச்சங்கள் காரணமாக எதிர்ப்பையும் பெற்றுள்ளது.
ஒரே தொகுதிக்குள் இருந்தால் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால், அவர்கள் முகவரி மாற்றுவதற்காக படிவம் 8-ஐ தான் கொடுக்க வேண்டும்
வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்குதல், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரண்டு முறை பதிவு செய்தவர்களை நீக்குவதன் மூலம் "ஒருவருக்கு ஒரு வாக்கு" என்ற கொள்கை உறுதிப்படுத்தப்பட்டு, தேர்தலின் நேர்மைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
பெருமளவில் ஏற்படும் இடம் பெயர்வு, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு ஆகியவற்றின் மூலம், வாக்காளர் பட்டியலில் தற்போதைய உண்மையான நிலவரத்தைப் பெற் முடியும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தல், வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ளுதல், ஆட்சேபனைகளைப் பொதுவெளியில் பெறுதல் போன்ற வழிமுறைகள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 (Representation of the People Act, 1950) பிரிவுகளின்படி, வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்து பராமரிப்பது தேர்தல் ஆணையத்தின் அடிப்படை கடமையாகும்.எனவே,பொது மக்கள் இப்பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் மட்டுமே வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நல்லது.