

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக கட்சியின் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றார். அவரை தொடர்ந்து அதே நாளில் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் இன்று மேலும் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 23 பேருக்கு இடம் அளிக்கப்பட்டது.
முன்னதாக தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இடங்களுக்கு காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவு அளித்தது. அதைத்தொடர்ந்து வேறு சில கட்சிகளும் தவெகவில் இணைய இறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதை தொடர்ந்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தந்த மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியை முதல்வர் விஜய் வழங்கி சிறப்பித்தார். அப்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களுக்கு தவெக அமைச்சர் அவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சர்கள் பதவியேற்ற நிகழ்வில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்தேறியது. அதில் ஒன்றுதான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிளியூர் ராஜேஷ் குமார் பதவி பிரமாணத்தின் போது பேசியது.
இதில் 59 வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றது இந்த அமைச்சரவையின் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் ராஜேஷ் குமார் அமைச்சராக இன்று பதவியேற்றார். ஆளுநர் நடத்தி வைத்த பதவிப் பிரமாணத்தின் போது உறுதிமொழிக்குப் பின் "காமராஜர், ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்க" என அவர் கூறினார். அப்போது ஆளுநர் அர்லேகர் இதைக் கவனித்து "இது உங்கள் உறுதிமொழியின் ஒரு பகுதி அல்ல" என்றது அனைவராலும் கவனிக்கப்பட்டது.
தவெகவில் இணைந்தாலும் தங்கள் கட்சி அபிமானியாகவே தான் இருப்பதை நிரூபிப்பதற்காக கிள்ளியூர் ராஜேஷ்குமார் இதுபோன்ற தங்கள் கட்சித் தலைவர்களின் பெயர்களை அமைச்சராக மேடையில் முழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.