பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்: முதலமைச்சர் ஸ்டாலின்!

பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம்: முதலமைச்சர் ஸ்டாலின்!

பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024 மக்களவை தேர்தலில் தமிழகர் ஒருவரை பிரதமராக்குவோம் என கூறியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் ஒருவர் பிரதமராக்கப்படுவார் என்ற அமிஷ்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபமோ என தெரியவில்லை என அதிரடியான பதிலை அளித்துள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைத்தார். குறுவை சாகுபடிக்காக கடந்த 90 ஆண்டுகளில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி, அதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளனர். இதுவரை இல்லாத ஒரு சாதனையாக மிக குறுகிய காலத்தில் 1.5 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டுஙளளது. இப்படி எண்ணற்ற திட்டங்களை விவசாயிகளுக்காக திமுக அரசு செயல்படுத்திவருகிறது. தொடர்ந்து 3வது ஆண்டாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவைக்க வந்துள்ளோம். இவ்வாறு திறந்துவைக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைய வேண்டும் அதற்கான திட்டமிடல்களும் செய்யப்பட்டுள்ளது. அதற்காக கடந்த ஆண்டு 62 கோடி ரூபாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. காவிரி நதிநீரை பயன்படுத்தி குறுவை நெல்சாகுபடியை அதிகாரிக்கவேண்டும்.

இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழர் ஒருவர் பிரதமராக்கப்படுவார் என்ற அமிஷ்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபமோ என தெரியவில்லை. கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என எந்த ஒரு புதிய திட்டமும் மத்திய பாஜக ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை. அதிக ஜிஎஸ்டி நிதி மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து கிடைத்தாலும், மற்ற மாநிலங்களைவிட குறைவான நிதியே தமிழ்நாட்டுக்கு ஒதுக்குகிறார்கள். மதுரை எய்ம்ஸ் அமைப்பதாக சொல்லி இதுவரை எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது. இதற்கு அமித்ஷா என்ன பதில் சொல்லப்போகிறார் என்றார்.

தமிழகர் பிரதமர் ஆவதை திமுக தடுத்தி நிறுத்தியதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார் என ஸ்டாலினிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர், தமிழர் பிரதமர் ஆவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால் விளக்கம் தரப்படும் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com