Rock-ன் முகத்துக்கு என்னதான் ஆச்சு?

Rock-ன் முகத்துக்கு என்னதான் ஆச்சு?
Published on

'The Rock' என்று சொன்னால் இந்த நபர் கட்டாயம் ஞாபகத்தில் வந்து விடுவார். அவர்தான் தி ராக் எனப்படும் Dwayne Johnson.  விடாமுயற்சி, வலிமை, மனோதிடம், மற்றும் வெற்றிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இவர் பார்க்கப்படுகிறார். கலிபோர்னியாவில் பிறந்து வளர்ந்த இவர் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார். 

இணையத்தில் பல கோடி மக்களால் விரும்பப்படும் நபர்களில் இவரும் ஒருவர். தன்னுடைய அன்பான செயல்கள் மற்றும் ரசிகர்கள் உடனான வீடியோக்களை தொடர்ந்து இணையத்தில் பதிவிடுவார். அவர் பதிவிடும் ஒவ்வொரு காணொளியும் வைரலாகாமல் இருந்ததில்லை. தன் மகள்களுடன் நேரத்தை செலவிடும் காணொளிகளும் இதில் அடங்கும். 

தன் மகள்கள் மீது எப்போதும் தீராக் காதலை வெளிப் படுத்தும் 'தி ராக்', சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த காணொளியில் அவர் முகம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. முகத்தில் ஸ்கெட்ச் வைத்து மீசை வரையப்பட்டிருந்தது. அந்த காணொளியைப் பார்த்தால், ஒரு காலத்தில் WWE மல்யுத்தத்தில் கொடி கட்டிப் பறந்த The Rock-ஆ இது என நினைக்கத் தோன்றுகிறது. 

அந்த காணொளியில் அவர்கள் பேசிக் கொண்டதாவது,

அப்பா உங்களுக்கு மேக்கப் போடலாமா?

இல்லை, அப்பாவுக்கு இன்னும் 10 நிமிடத்தில் ஜூன் மீட்டிங் இருக்கிறது.

இல்லை நாங்கள் போடும் மேக்கப் விரைவாக முடிந்துவிடும்.

–சரி என்னுடைய நகத்திற்கு மட்டும் போட்டு என்னை அழகாக்குங்கள் பார்க்கலாம்..

என்று அந்த காணொளியில் பேசிக்கொள்வார்கள். 

இந்த காணொளி பதிவேற்றியவுடன், அதற்கு Caption-ஆக, " zoom மீட்டிங் கேன்சல் செய்யப்பட்டது. என் இரு மகள்களும் எந்த கருணையும் இல்லாமல் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக என் முகத்திலும் தலையிலும் இருக்கும் லிப்ஸ்டிக்கை துடைக்க முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை. இதனால் என்னுடைய முகமே மாறிவிட்டது" என்று போடப் பட்டிருப்பதைப் படித்தால் யாராலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது. 

இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் இதுவரை 7.5 மில்லியன்களுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. அவர் குழந்தைகளுடன் பழகும் விதம் ரசிக்கும்படியாக இருக்கிறது. இவருடைய இந்த செயலைப் பாராட்டி பல்லாயிரக்கணக்கான கருத்துக்கள் இன்ஸ்டாகிராமில் குவிந்த வண்ணம் உள்ளன. 

என்னதான் மல்யுத்த வீரனாக இருந்தாலும், தன் குழந்தைகளிடம் மண்டியிட்டுதானே ஆக வேண்டும்? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com