
இன்றைய நவீன உலகில், வாட்ஸ்அப் என்பது வெறும் தகவல் பரிமாற்ற செயலி மட்டுமல்ல; அது கோப்புகள், ஆவணங்கள் மற்றும் மிக முக்கியமாக, திருமண அழைப்பிதழ்களைக்கூட அனுப்பும் ஒரு வசதியான தளமாக மாறியுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பலருக்கு இது ஒரு எளிமையான தீர்வாக இருந்தாலும், மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியருக்கு, இந்த டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் ரூ. 1.9 லட்சம் இழப்பை ஏற்படுத்திய ஒரு மோசடியின் தொடக்கமாக அமைந்தது.
ஒரே ஒரு கிளிக்கில், அவரது சேமிப்பு அனைத்தும் பறிபோயின.இந்த வாட்ஸ்அப் திருமண அழைப்பிதழ் மோசடி பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.
இது குறித்து காவல் துறையினர் பலமுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போதிலும், இந்த மோசடி சமீபத்தில் ஒருவரைப் பாதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த அரசு ஊழியர், அவருக்குத் தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஒரு மெசேஜ்ஜைப் பெற்றார்.
அந்த மெசேஜில், ஒரு திருமணத்துக்கான மகிழ்ச்சியான அழைப்பு இருந்தது. ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் ஒரு நட்புரீதியான வாழ்த்துடன், அந்த மெசேஜில் PDF வடிவில் ஒரு கோப்பும் இணைக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர் அந்தக் கோப்பை ஒரு முறை கிளிக் செய்த உடனேயே, அந்த APK கோப்பு அவரது மொபைலில் தானாகவே நிறுவப்பட்டது.
நிறுவப்பட்ட பிறகு, அந்த வைரஸ் கோப்பு, மோசடியாளர்களுக்கு அவரது போனை முழுமையாக அணுகும் உரிமையை வழங்கியது.
ஒரு சில நிமிடங்களில், அந்த மோசடியாளர்கள் அவரது மொபைலின் பாதுகாப்பு அம்சங்களை உடைத்து, அவரது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செயலிகளை அணுகி, அவருடைய கணக்கிலிருந்து ரூ. 1.9 லட்சத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றினர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டவுடன், சைபர் குற்றப்பிரிவில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், குற்றவாளிகளைப் பிடிப்பது இன்னமும் ஒரு சவாலான பணியாகவே உள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களின் சைபர் காவல்துறை ஏற்கனவே இந்த மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நம்பகமான மூலத்திலிருந்து வந்ததாகத் தோன்றினாலும், அறியாத எண்களில் இருந்து வரும் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மோசடி மனிதர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. டிஜிட்டல் அழைப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் பொதுவான பழக்கத்தைப் பயன்படுத்தியே இந்த மோசடி நடக்கிறது.
ஒருமுறை அந்த மால்வேர் (malware) நிறுவப்பட்டால், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் போனை கண்காணிக்கவும், தனிப்பட்ட தகவல்களைத் திருடவும், அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றவும் முயல்கின்றனர்.
இந்த மோசடியில் இருந்து பாதுகாப்பது எப்படி?