குடியரசு தினத்தை ஒட்டி 1132 பேருக்கு விருதுகள் மற்றும் சேவைப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது! 

Awards presented on Republic Day 2024.
Awards presented on Republic Day 2024.
Published on

நாளை இந்தியாவில் 75 வது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில் காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை மற்றும் குடிமை தற்காப்பு, சீர்திருத்த பணி உள்ளிட்ட 1132 பணியாளர்களுக்கு வீரம் மற்றும் சேவை பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று போலீசாரும் அடங்குவர்.

கேலண்ட்ரி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில், இருவருக்கு ஜனாதிபதி பதக்கமும், 275 பேருக்கு வீரத்திற்கான பதக்கமும் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 277 கேலண்ட்ரி விருதுகள் பட்டியலில், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 119 பணியாளர்களும், ஜம்மு-காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 133 பணியாளர்களும், மற்ற பகுதிகளைச் சேர்ந்த 25 பணியாளர்களும் அடங்குவர். 

அதேபோல தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட 26 போலீசாரின் பணியை பாராட்டி விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளையும் தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான ராமலிங்கம், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 83 வயது கோதண்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 67 வயதான சூரியகாந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அதேபோல 2022 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுக்காக, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயதான நடராசன், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 94 வயதான மாணிக்கவாசகம் ஆகியோருக்கு கொடுக்கப்பட உள்ளது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com