காங்கிரஸ் தலைவர் யார் : தேர்தல் அறிவிப்பு?

Ashok Khelat and  Sasi Tharoo
Ashok Khelat and Sasi Tharoo

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது. இதில் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டெடுப்பின் படி காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படபோகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இப்போட்டியில் அசோக் கெலாட் ,சசி தரூர் போன்றோர் போட்டியிடப் போவதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக தேர்தல்களில் காங்கிரஸ் சந்தித்த  தொடர் தோல்விகளால், தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா இருந்து வருகிறார்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர்.

இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் குழு இன்று வெளியிடுகிறது.

Ashok Khelat
Ashok Khelat

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். போட்டியில் ஒருவருக்கு மேல் இப்பதவிக்கு போட்டியிட்டால் அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெறும். தேவைப்பட்டால் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ம் தொடங்கி அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதில் மூத்த தலைவர்கள் சசிதரூர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.  மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்  போன்றோரும் களத்தில் நிற்கலாம் என்றும் செய்திகள் கசிகின்றது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் . தேர்தல் மிக வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடக்கும் என்றும், மேலும் 10 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வரவேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று முன்தினம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com