பெண் முதலமைச்சர்கள் பட்டியலில் இணைய உள்ள கல்பனா சோரன்! யார் இவர்?

Kalpana Soren
Kalpana Soren

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை, நிலமோசடி விவகாரம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஹேமந்த் சோரனை விசாரிக்க ஜார்கண்ட் பவன் மற்றும் மோதிலால் நேரு மார்க்கிலுள்ள அவரின் தந்தை இல்லத்துக்குச் சென்றனர்.

ஆனால், அவர் அங்கு இல்லாததால், தில்லியில் அவரது முதல்வர் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் ஹேமந்த் சோரன் இல்லை. அதேசமயம் சோதனையில் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ள அதிகாரிகள், சட்டவிரோத நிதியை பயன்படுத்தி வாங்கப்பட்டதாக கூறி ஹேமந்த் சோரனின் பி.எம்.டபிள்யூ காரை பறிமுதல் செய்துள்ளனர்.

இன்னொருபக்கம், அமலாக்கத்துறையின் சம்மனை உச்ச நீதிமன்றத்தில் அவர் எதிர்கொள்ளவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுவரையில், ஹேமந்த் சோரன் எங்கு இருக்கிறார் என்ற தகவல் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரது வீட்டைச் சுற்றி 100 மீட்டர் அளவுக்கு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய வீட்டில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார் ஹேமந்த் சோரன். ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் களம் இவ்வாறு நகர்ந்துக்கொண்டு இருக்கையில், அம்மாநிலத்தின் அடுத்த முதல்வயர் யார் என்ற பேச்சு எழத்தொடங்கியுள்ளது.

குறிப்பாக, தற்போதைய முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்,

ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் (48) 1976ஆம் ஆண்டு ராஞ்சியில் பிறந்த கல்பனா சோரன், ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்பனா சோரன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்ததோடு எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டும் கல்பனா, சொந்தமாக பள்ளி நடத்துவதோடு இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஹேமந்த் சோரனை மணந்தார். கல்பனா - ஹேமந்த் சோரன் தம்பதிக்கு நிகில் மற்றும் அன்ஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு வரை தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த கல்பனா சோரன், அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் வந்ததையடுத்து, அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கினார்.

1997ஆம் ஆண்டில் அப்போதைய பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அந்த சமயத்தில் பதவி விலகிய லாலு யாதவ், தனது மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சராக்கினார். ஆனாலும், அரசாங்கம் லாலுவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அந்த பாணியில் ஹேமந்த் சோரனும் தனது மனைவி கல்பனாவை முதல்வராக்க முயற்சித்து வருகிறார் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி மாதத்திற்கு ஏற்பட்ட மன வருத்தம்! எதனால் தெரியுமா?
Kalpana Soren

இதனிடையே ஹேமந்த் சோரன் இன்று அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். முன்னதாக, ஹேமந்த் சோரன் கல்பனாவை முதலமைச்சராக்கும் வதந்திகளை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com