

ஸ்பெயின் அரச குடும்ப வரலாற்றில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, இளவரசி லியோனோர் (Princess Leonor) நாட்டின் முதல் ராணியாகப் பொறுப்பேற்று வரலாறு படைக்கவுள்ளார். தனது 20-வது வயதிலேயே அவர் அரியணை ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னர் ஃபிலிப் VI( King Felipe VI) மற்றும் ராணி லெடிசியாவின் மூத்த மகளான இவர் அக்டோபர் 31, 2005ல் பிறந்தார். இவர் சாண்டா மரியா டி லாஸ் ரோசல்ஸ் பள்ளியில் கல்வி பயின்றார். இடைநிலைப் படிப்பை முடித்த பிறகு ஐக்கிய ராஜ்ஜியத்தின் வேல்ஸ் கிளாமோர்கனில் உள்ள UWC அட்லாண்டிக் கல்லூரியில் சர்வதேச இளங்கலை பட்டம் பெற்றவர். ஆகஸ்ட் 17, 2023ல் மூன்றாண்டு ராணுவக் கல்வியைத் தொடங்குவதற்கு பொது ராணுவ அகாடமியில் சேர்ந்தார். இது ஸ்பெயின் மன்னர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய பயிற்சியாகும். 2014 இல் அவருடைய தாத்தா ஜுவான் கார்லோஸ் I பதவி விலகிய பிறகு இவருடைய தந்தை அரியணை ஏறியதைத் தொடர்ந்து, லியோனாருக்கு ஸ்பானிஷ் கிரீடத்தின் வாரிசுக்கான அனைத்து பாரம்பரிய பட்டங்களும் வழங்கப்பட்டன.
லியோனாருக்கு ஸ்பானிஷ் கிரீடத்தின் வாரிசுக்கான அனைத்து பாரம்பரிய பட்டங்களும் வழங்கப்பட்டன. அவை அஸ்டூரியாஸ் இளவரசி, ஜிரோனா இளவரசி, வியனா இளவரசி, மோன்ட்பிளாங்கின் டச்சஸ், செர்வெராவின் கவுண்டஸ் மற்றும் பாலாகுயர் லேடி. லியோனரின் 18வது பிறந்த நாளான அக்டோபர் 31, 2023 அன்று கோர்டெஸ் முன் முறையாக வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
18வது பிறந்தநாளான அக்டோபர் 31, 2023ல் ஸ்பெயின் அரசியலமைப்புக்கு விசுவாசமாக பிரமாணம் செய்து, அதிகாரப்பூர்வமாக அரியணைக்கான தனது நிலையை உறுதிப்படுத்தினார்.ஜராகோசாவில் உள்ள ஜெனரல் மிலிட்டரி அகாடமி, மாரினில் உள்ள கடற்படை மிலிட்டரி அகாடமி மற்றும் முர்சியாவில் உள்ள ஜெனரல் ஏர் அகாடமி ஆகியவற்றில் முறையே 3 ஆண்டுகள் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சியைப் பெற்றார். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைப் பயிற்சிகளை முடித்து ராணியாக பொறுப்பேற்க தயாராக உள்ளார். எதிர்பார்த்தபடி லியோனோர் அரியணை ஏறினால், 1833 முதல் 1868 வரை ஆட்சி செய்த அவரது நான்காவது கொள்ளுப்பாட்டியான இசபெல்லா IIவிற்குப் பிறகு ஸ்பெயினின் முதல் ராணியாக திகழ்வார்.
டிசம்பர் 18, 2025 இல் பிலாட்டஸ் பிசி-21இல் தனது முதல் தனி விமானப் பயணத்தை மேற்கொண்டார். ஸ்பானிஷ் அரச குடும்பத்தில் தனியாக விமானத்தை இயக்கிய முதல் பெண் உறுப்பினர் இவர்தான்.