குஜராத் பாலம் விபத்திற்கு யார் காரணம்? வெடிக்கும் சர்ச்சைகள்!

குஜராத் பாலம் விபத்து
குஜராத் பாலம் விபத்து

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற பகுதியில் கடந்த ஞாயிறு அன்று தொங்கு பாலம் திடீரென அறுந்து விழுந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கூடவே இந்த சம்பவத்திற்கு யார் காரணம் ? யார் பொறுப்பு ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மோர்பி தொங்கு பால விபத்து குறித்து விசாரணை செய்ய குஜராத் அரசு ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினர் விசாரணை செய்து இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்து கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓரேவா நிறுவனம் தான் பாலம் சீரமைப்பு பணிகளை முழுமையாக மேற்கொண்டது. எனவே இந்நிறுவனம் இந்த விபத்துக்கு பொறுப் பேற்க வேண்டும் என்று பல தரப்பிலும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்த ஓரேவா நிறுவனம் அஜந்தா கடிகாரங்கள், எலக்ட்ரிக் பைக் உள்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டாலும், பாலம் பராமரிப்பதில் இதற்கு முன் இந்த நிறுவனத்துக்கு பெரிய அனுபவம் இல்லை என்று பலராலும் கூறப்படுகிறது.

மோர்பி தொங்கு பாலம்
மோர்பி தொங்கு பாலம்

மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் சர்ச்சையாகி வருகிறது. பழமையான இந்த பாலத்தை சீரமைக்க கடந்த மார்ச் மாதம் ஓரேவா நிறுவனத்திடம் நகராட்சி நிர்வாகம் பணியை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது.

அஜந்தா கடிகாரங்கள் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வரும் ஓரேவா நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு பாலத்தை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிகிறது. அதனை அடுத்து இந்நிறுவனம் பார்வையாளர்களின் கட்டணத்தையும் நிர்ணயம் செய்து இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து தற்போது விரிவான விசாரணைக்கு உத்திரவிடப் பட்டுள்ளது. விசாரணை அறிக்கைகள் வெளிவந்த பிறகே இது குறித்து தெளிவாக அறியமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com