நீண்ட காலம் ஒன்றாக இருக்கும் தம்பதிகள் ஒத்திருப்பது இயல்பு. ஆனால், இவர்களைப் போலவா?
சீனாவின் லியாங் கைவு (Liang Caiyu) மற்றும் ஹி சியான்செங் (He Xiansheng) தான் அந்த இணைய வைரல் தம்பதி.
இவர்கள் அச்சு அசல் இரட்டையர் சகோதரிகளைப் போல் காட்சியளிக்கிறார்கள். ஆமாம், கணவன்-மனைவி இரட்டையர்களைப் போல இருக்கிறார்கள்.
இணையத்தைக் கலக்கிய 'ஒரே முகம்'
சீனாவின் டாங்குவான் மாகாணத்தைச் சேர்ந்த இவர்களின் ஒற்றுமை வியக்க வைக்கிறது.
இவர்களைப் பார்ப்பவர்கள், "இதில் யார் கணவர், யார் மனைவி?" என்று குழம்பிப் போகிறார்கள்.
ஒரு முகத்தை காப்பி-பேஸ்ட் செய்தது போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாரம்பரிய மூலிகை மருத்துவக் கடை நடத்தும் இவர்கள், 'டோயினில்' (சீன டிக்டாக்) குறும்படங்களை வெளியிட்டனர்.
இவர்களின் முதல் வீடியோவே செம ஹிட் அடித்தது. அதன் தலைப்பு: "யார் கணவர், யார் மனைவி?"
சட்டென்று வைரலான அந்த வீடியோவில், இருவரும் ஒரே போல விக் அணிந்து, ஒரே முகபாவங்களைக் காட்டினர்.
பிசினஸ் தந்திரமாக மாறிய ஒற்றுமை
ஆரம்பத்தில் இவர்களின் மூலிகைக் கடைக்கு அதிக கவனம் கிடைக்கவில்லை.
ஆனால், இந்த 'இரட்டை முகம்' ஒற்றுமை ஒரு ரகசிய மார்க்கெட்டிங் ஆயுதமாக மாறியது.
இப்போது வாடிக்கையாளர்கள் மூலிகைகளுக்காக மட்டுமல்லாமல், இந்த ஆச்சரியமான தம்பதியைப் பார்க்கவே கடைக்கு வருகிறார்கள்.
"இரட்டையராக இருப்பது" இப்போது இவர்களுக்கு ஒரு வெற்றிகரமான வணிக உத்தியாகிவிட்டது.
3,50,000 லைக்ஸ்களை குவித்த ஒரு வீடியோ இதற்குச் சாட்சி.
அதில், மனைவி லியாங், தன் கணவருக்கு மேக்கப் போடுகிறார். பார்ப்பதற்கு அவர்கள் இருவரும் இரட்டைச் சகோதரிகள் போலவே இருக்கிறார்கள்!
இனிமையான காதல் கதை
இந்த சிரிப்புக்குப் பின்னால் ஒரு அழகான காதல் கதை ஒளிந்துள்ளது.
இவர்கள் முதலில் ஒரு மேட்ரிமோனி மூலம் தான் சந்தித்துள்ளனர்.
சந்தித்த ஆறு மாதங்களுக்குள் உடனடியாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரின் குடும்பமும் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரிய சீன மருத்துவத் தொழிலில் உள்ளன.
"முதலில் சந்தித்தபோது, எங்களுக்குள் எந்த ஒற்றுமையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை," என்கிறார் லியாங்.
"ஆனால், தினமும் ஒன்றாக வேலை செய்வது, சாப்பிடுவது, ஓய்வெடுப்பது எனப் பழகிய பின், தானாகவே எங்கள் தோற்றம் ஒத்திருக்க ஆரம்பித்தது" என்று அவர் வியக்கிறார்.
உளவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்? நிறைய நேரம் ஒன்றாகச் செலவிடும் தம்பதிகளுக்குச் சில ஆண்டுகளில் முகபாவங்களும், தோற்றமும் கூட ஒத்திருக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் லியாங் மற்றும் ஹி தம்பதி, அந்த எல்லையையும் தாண்டிவிட்டார்கள்.
நெட்டிசன்கள் வழக்கம் போலத் தங்களின் கருத்துக்களைக் கொட்டினர்.
"அவர்கள் ஒரே முகத்தைத்தான் பகிர்ந்து கொள்கிறார்கள்!" என்று ஒருவர் கிண்டல் செய்தார்.
"யாராவது இவர்களுக்கு DNA டெஸ்ட் எடுத்துப் பாருங்கள்!" என்று மற்றொருவர் வேடிக்கையாகக் கேட்டுள்ளார்.
இந்த வியத்தகு ஒற்றுமையைக் கொண்டு லியாங் மற்றும் ஹி தம்பதி தங்கள் வணிகத்தை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்.