டாடா சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைவர் யார்?

Ratan Tata and his family
Ratan Tata
Published on

டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் யார் என்பதுதான் இந்திய மக்களிடையே அடுத்த கேள்வியாக உள்ளது.

இந்திய பணக்காரர்களுள் ஒருவரான ரத்தன் டாடா 1990 முதல் 2012 வரை டாட்டா குழுமத்தின் தலைவராக இருந்தார்.  டாடா குழுமம் ஏராளமான பொது சேவைகளையும் செய்து வருகிறது. கல்வி, மருத்துவம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது. கல்விக்கும், மக்களின் மேம்பாட்டிற்கும்  பல தொண்டுகளை செய்து வரும் டாடா குழுமம், தனது தொழிலிலும் இடைவிடாது கவனம் செலுத்தியே வருகிறது.

டாடா குழுமம் ஜாம்ஷத்பூர் என்ற நகரத்தை முதலில் உருவாக்கியது. பல வசதிகளுடன் இந்தியாவிலேயே சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில் ஸ்டீல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஓசூரில் ஒரு டாடா நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான வேலைகள் இன்னும் ஆரம்பமாகவில்லை.

இப்படியான சூழ்நிலையில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று இரவு அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக செய்திகள் வந்தன. இதனைத்தொடர்ந்து அவர் இறந்த செய்தி அனைவரையும் துக்க வெள்ளத்தில் தள்ளியது.

ரத்தன் டாடா திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்பதால், அவருக்கு வாரிசு கிடையாது. ஆகையால் அவரது 3800 கோடி மதிப்புள்ள டாடா சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைவர் யார் என்ற  சந்தேகம் இந்திய மக்களிடையே எழுந்துள்ளது.

அந்தவகையில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மேனாக என். சந்திரசேகர் இருக்கிறார். அதேபோல் டாடா குழுமத்தில் ரத்தன் டாடாவின் குடும்பத்தினர் சிலர் உள்ளனர். டாடாவின் சகோதரரான (Half brother) நோயல் டாடாவிற்கு தலைவர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் குடும்ப பிணைப்பின் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நோயல் டாட்டாவிற்கு மாயா, நெவில், லியா என்ற மூன்று வாரிசுகள் உள்ளனர். அவர்களே டாடா குழுமத்தின் சாத்தியமான வாரிசுகளாகக் கருதப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
Ratan Tata Quotes: ரத்தன் டாடாவின் 12 தலைசிறந்த மேற்கோள்கள்! 
Ratan Tata and his family

இதில் மாயாவிற்கு 34 வயதாகிறது. இவரே டாட்டா குழுமத்தில் நிதி மற்றும் டாடா டிஜிட்டல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். Tata NCU செயலியை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு இவருக்கே உண்டு. 39 வயதான லியா டாடா இந்தியன் ஹோட்டல்  நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கிறார். நெவில் டாடா ஸ்டார் பஜாருக்கு தலைமை தாங்கி வருகிறார்.

நோயல் டாடாவிற்கு அடுத்து இந்த மூவரில் ஒருவர் டாடா குழுமத்தின் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com