வெற்றி யாருக்கு ? யார் காங்கிரஸின் அடுத்த தலைவர்?

மல்லிகார்ஜுன கார்கே vs சசி தரூர்
மல்லிகார்ஜுன கார்கே vs சசி தரூர்

இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இதன் தலைவர் பொறுப்பிற்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியாக மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் பெயர்கள் பரிசீலக்கப்பட்டு தற்போது இருவரும் போட்டியில் உள்ளனர்.

நேரிடையாக மோதும் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் இருவரில் வெற்றி யாருக்கு என்பது இன்று தெரிந்துவிடும். இன்று வெளியாகிற காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகளில் ஜெயிப்பது தலைமையின் ஆசி பெற்ற மல்லிகார்ஜுன கார்கேவா ? அல்லது தனி செல்வாக்கு பெற்ற சசி தரூரா என்பது இன்று வெளியாகிவிடும்.

காங்கிரஸ் தேர்தல்
காங்கிரஸ் தேர்தல்

பல ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் என்பதை பல அரசியல் வல்லுநர்கள் உற்று நோக்குகிறார்கள். பார்க்கலாம் யார் காங்கிரஸின் அடுத்த தலைவர் என்று?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com