ஜெயிக்க போவது யார்? இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு மினி பஸ் சேவை!

ஜெயிக்க போவது யார்? இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு மினி பஸ் சேவை!
Published on

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பார்க்கும். அதிலும் இந்திய கிரிக்கெட் அணி ஆடுகிறது என்றால் கேட்கவே வேண்டாம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியோடு மோதுகிறதா பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம். அதுவும் வெற்றியை நிர்ணயிக்க போகும் கடைசி போட்டியா அப்ப பட்டையை கிளப்புமே..!

அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

இந்த தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.

போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.

இரு அணி வீரர்களும் இன்று பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியை காண வரும்.ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி வழக்கப்பட்டுள்ளது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com