தனிமை ஏன்? நாகாலாந்து அமைச்சரின் விநோத விடியோ!

தனிமை ஏன்? நாகாலாந்து அமைச்சரின் விநோத விடியோ!

நாகாலாந்தில் உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் டெம்ஜென் இம்னா அலோங், மிகவும் பிரபலமான அரசியல்வாதி. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தமது கருத்துகளை வித்தியாசமான முறையில் பதிவிட்டு நெட்டிஸன்களுக்கு கலகலப்பு ஏற்படுத்தி வருவார்.

வாழ்க்கைக்கு தேவையான அறிவுரை, தனது சொந்த வாழ்க்கை சம்பவங்களை நெட்டிஸன்களிடம் பகிர்ந்துகொள்வார். சமூக வலைத்தளங்களில் வெளிவரும் விடியோக்களுக்கு நகைச்சுவையாக கருத்துக்களைத் தெரிவிப்பதிலும் வல்லவர்.

அவர் சமீபத்தில் தீத்தடுப்பு, பாதுகாப்பு குறித்த விடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டு தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் “கணவர்கள் எப்படி தீயுடன் விளையாடுகிறார்கள் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடியோவில் ஒரு பெண் (மனைவி) சமையலறையில் உணவு தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவளுடைய கணவனோ பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்கிறார். திடீரென

அந்த பெண் அடுப்பில் பயன்படுத்திய வாணலியிலிருந்து தீப்பொறி கிளம்புகிறது. இதையடுத்து அவளது கணவன் பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு அறையிலிருந்த மகளை தூக்கிக் கொண்டு சமையலறை கதவை சாத்திவிட்டு வெளியேறுகிறார். ஆனால், சமையலறையில் அவனது மனைவி மட்டும் அதிர்ந்து போய் நிற்கிறாள். கோபத்தில் அந்த பெண் கையில் செருப்பை எடுத்துக் கொண்டு கணவனை துரத்துகிறாள். இந்த இடத்தில் பாசமுள்ள தந்தையா அல்லது கடமை தவறான கணவனா என்ற போராட்டம் ஏற்படுகிறது. நான் திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மசாரியாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் டெம்ஜென் இம்னோ அலாங்.

அதே நேரத்தில் தீயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வீட்டில் தீ பாதுகாப்பு கருவிகளை எப்போதும் வைத்திருங்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடியோவை டுவிட்டரில் பார்த்த நெட்டிஸன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஒருவர், “திருமண பந்தத்திலிருந்து இப்படி எவ்வளவு நாட்கள்தான் தப்பித்துக் கொள்வீர்கள் என்பதை பார்த்துவிடுவோம்” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோவுக்கு பிறகு அவருக்கு ஒருவேளை உணவுதான் கிடைத்தது. 3 மாதத்தில் அவர் 20 கிலோ எடை குறைந்துவிட்டது. ஜிம்முக்கு

செல்வதைவிட திருமணம் செய்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. தயவு செய்து பரிசீலியுங்கள் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் அலோங் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார். அதில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கியிருப்பதை சுட்டிக்காட்டும் படத்தை வெளியிட்டிருந்தார். அதில் போக்குவரத்து நெரிசலுக்கு அரசு மீது புகார் கூறாமல், செல்போனில் மெய்நிகர் கூட்டத்தில் அவர் பேசும் படம் வெளியானது. பா.ஜ.க.வினர் போக்குவரத்து நெரிசலிலும் பயனுள்ள வகையில்தான் நேரத்தை செலவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com