மற்ற மாநில மொழிகளின் தினத்தை ஏன் கொண்டாடுவது இல்லை? மு.க.ஸ்டாலின் கேள்வி !

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

இன்று சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் .

அதன் பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில், தமிழ் மொழியைக் காப்பதற்காக மட்டுமல்ல ஆதிக்க மொழித்திணிப்புக்கு எதிராக என்றும் குரல் கொடுப்பவர்கள் என்ற அடிப்படையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிய விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்றும் , மொழி என்பது நமது உயிராய்,உணர்வாய்,விழியாய், எதிர்காலமாய் இருக்கிறது. அத்தகைய மொழியை வளர்க்கவும், பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவுமுமே நாம் பாடுபடவேண்டும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போராட்டம்
போராட்டம்

1938-ம் ஆண்டு முதல் இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களும் விடுவதாக இல்லை; நாமும் விடுவதாக இல்லை; இது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இந்தி மொழி தினம் கொண்டாடும் ஒன்றிய அரசு, மற்ற மாநில மொழிகளின் தினத்தை ஏன் கொண்டாடுவது இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி மொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் என்பது மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதாக மட்டுமில்லை, அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்தியை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக மட்டுமல்ல அதிகாரம் செலுத்தும் மொழியாக பாஜக அரசு உயர்த்திக் கொண்டு இருக்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக அதனை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என சட்ட பேரவையில் பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com