தமிழகக் காவல்துறை வருமான வரித்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்காதது ஏன் ? பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி ..!

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை
Published on

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் . இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ,"வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் எப்படி தெரிந்தது. உடனடியாக சோதனை நடைபெறும் இடங்களில் கூட்டம் சேர்த்தது எப்படி? காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்?" என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு, அவரது நிறுவனம் மட்டும் அவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று (மே 26) காலை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்ள வந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித் துறையினருடன் வாக்குவாதம், அவர்கள் வந்த கார் கண்ணாடி உடைப்பு என போர்க்களமானது.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவர்களின் நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமானதாக சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறையினரை தங்கள் பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

வருமான வரித்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய தமிழகக் காவல்துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள் பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது என கூறியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com