சீன பொருட்களின் இறக்குமதி ஏன்? டெல்லி முதல்வர் கேள்வி!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டில்  சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் நேற்று நடந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

நம் நாட்டு எல்லையில் கடந்த சில நாட்களாக,சீனா ஆக்கிரமிப்பு அதிகளவில் நடந்து வருகிறது.இதனை தடுக்க இந்திய ராணுவர்கள் தனது உயிரையும் பணையம் வைத்து சீன ராணுவத்துடன் போராடுகின்றனர். இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு எல்லாம் சரியாகிவிட்டது என கூறி சீனா நாட்டின் இறக்குமதியை அதிகளவில் அனுமதிக்கிறது.

நடப்பு ஆண்டில் மட்டும்  95 பில்லியன் டாலருக்கு சீன இறக்குமதியை அனுமதித்தது மத்திய அரசு. சீனா நம் நாட்டின் மீது செய்யும் எல்லை ஆக்கிரமிப்பை மறந்து அந்நாட்டு பொருட்களின் இறக்குமதியை ஏன் அதிகரிக்க வேண்டும்? சீன தயாரிப்புகளை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே நாங்கள் வாங்குவோம் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் அருமை மத்திய அரசுக்கும் இந்தியாவின் அருமை சீனாவுக்கும் புரிய வரும்.

 -இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com