‘கணவரின் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உண்டு’ சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

‘கணவரின் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உண்டு’ சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

Published on

‘வெளிநாட்டில் வேலை செய்து தாம் வாங்கிய சொத்துக்களில் தனது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை’ என கணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் கருத்துத் தெரிவித்த நீதிபதி, “இல்லத்தரசிகளின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது. கணவரது பணி 8 மணி நேரம் மட்டும்தான். ஆனால், இல்லத்தரசியின் பணி 24 மணி நேரமாகும். விடுமுறை இல்லாமல் குழந்தைகளை கவனிப்பது, குடும்ப நிர்வாகம் என இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் வேலை பார்க்கின்றனர்.

மனைவி குடும்பத்தைக் கவனிப்பதால்தான் கணவரால் தனது பணியைச் செய்ய முடிகிறது. வருவாய் ஈட்டி கணவர் தனது பங்கை வழங்கினாலும், குடும்பத்தை கவனித்து தனது பங்களிப்பை மனைவி வழங்குகிறார். எனவே, கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது” என தெரிவித்து கணவர் தொடுத்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தவிட்டு இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com