புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, சித்துவுக்கு அவர் எழுதிய இதயப்பூர்வமான குறிப்பு!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, சித்துவுக்கு அவர் எழுதிய இதயப்பூர்வமான குறிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரரும் இந்திய அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால், கணவர் சித்துவோ உடனிருக்க முடியாத நிலை. கடந்த 2022 முதலே சித்து சிறையில் இருக்கிறார். எனவே நோய்மையில் கணவரின் அருகாமையை நாடும் மனைவியாக அவர் தன் கணவர் சித்துவுக்கு ட்விட்டரில் ஒரு இதயப்பூர்வமான குறிப்பு எழுதியுள்ளார். அது இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அரசியல்வாதி நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு ஸ்டேஜ் 2 இன்வேசிவ் கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நோயறிதலின் செய்தியைப் பகிர்ந்துகொண்டு,

"அவர் (நவ்ஜோத் சிங் சித்து) செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்னியுங்கள். ஒவ்வொரு நாளும் நான் உங்களுக்காகக் காத்திருப்பது என்பது உங்களை விட அதிகமான துன்பத்தை நான் அனுபவிப்பதைப் போலிருக்கிறது. வழக்கம் போல் உங்கள் வலியைப் போக்க முயற்சித்து, அதைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். எனக்குள் ஒரு சிறிய வளர்ச்சியைக் கண்டேன், அது மோசமானது என்று தெரியும்." - என்று ஒரு குறிப்பை எழுதி இருந்தார்.

தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், "உங்களுக்காகக் காத்திருந்தேன், உங்களுக்கு மீண்டும் மீண்டும் நீதி மறுக்கப்படுவதைக் கண்டு, உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது, ஆனால் உன்னை மீண்டும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தும். KALYUG. மன்னிக்கவும், இது ஸ்டேஜ் 2 என்பதால் உங்களுக்காக காத்திருக்க முடியாது. எனது புற்றுநோய் ஆக்கிரமிப்பு இன்று கத்தியின் கீழ் செல்கிறது. யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை, ஏனெனில் இது கடவுளின் திட்டம்: சரியானது."

என்று ட்விட்டரில் அவர் தமது கணவருக்கான செய்தியைப் பகிர்ந்திருந்தார்.

அவருடைய ட்விட்டர் பதிவைக் கண்ட பஞ்சாப் காங்கிரஸ் பிரசிடெண்ட் அமரிந்தர் சிங் ராஜா வாரிங், நீங்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படவிருப்பதை எண்ணி நான் வருந்துகிறேன். நல்ல வேளை, நோய் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு செல்கிறீர்கள், நீங்கள் விரைவில் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன் வாஹேகுரு மெஹர் கரன்” என ஆறுதல் கூறும் விதத்தில் ட்விட் செய்திருந்தார்.

34 ஆண்டுகள் பழமையான வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு மே 2022 முதல் சித்து, பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com