தேனியில் காட்டு யானைகள் அட்டகாசம்! ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மர கன்றுகள் சேதம்!

தேனியில் காட்டு யானைகள் அட்டகாசம்!  ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மர கன்றுகள் சேதம்!
Published on

கூடலூர் வெட்டுக்காடு வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக விவசாய பகுதிகளுக்கு புகுந்து சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்துள்ளது .தேனியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சென்று மரங்களை சேதப்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகிறது. விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசத்தினால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மர கன்றுகள் சேதமடைந்தது

கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வாழை தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து மற்றும் வாழை தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கூடலூர் வெட்டுக்காடு பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

அதுமட்டுமின்றி சோள பயிரையும் சேதப்படுத்தியுள்ளது. பின்னர் கூடலூரை சேர்ந்த ரமேஷ் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து 600-க்கும் மேற்பட்ட வாழைகள், 10 தென்னைமரங்களையும், சுதாகர் என்பவரது தோட்டத்தில் பூச்செடிகள், சொட்டுநீர் பாசன குழாய்கள், வைஜெயந்தி என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

விடிய, விடிய அந்த தோட்டங்களுக்குள் முகாமிட்டிருந்த காட்டு யானைகள், நேற்று அதிகாலை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதற்கிடையே காலையில் தங்களது தோட்டங்களுக்கு வந்த விவசாயிகள், வாழை, சோளம், தென்னை உள்ளிட்ட பயிர்கள் நாசமாகி இருப்பதை கண்டு வேதனை அடைந்தனர். இதனால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் விவசாயிகள் இரவு நேரம் தோட்டங்களில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு காட்டு யானைகள் கூட்டமாக விவசாய பகுதிகளுக்கு புகுந்து சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்துள்ளது .

தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு வேலைகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களுக்குள் வந்து வாழை மற்றும் தென்னை பயிர்களை சாப்பிடுவதற்காக விளைநிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த காட்டு யானைகளை விவசாய பகுதிக்கு வராமல் அகழிகள் வெட்டி வனத்துறையினர் தடுக்க வேண்டுமென என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com