ரயில் மோதி காட்டு யானைகள் பலி!

Train accident
Train accident
Published on

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் வரும்போது காட்டு யானைகள் நடுவே வந்ததால், இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

ரயில் விபத்துக்கள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக காடுகள் இருக்கும் பகுதியில் ரயில் தடம் இருந்தால், விலங்குகள் கடக்கும்போது பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. ரயில் விபத்தோ அல்லது விமான விபத்துக்களோ எற்பட்டால், அது பெரிய அளவு சேதத்தை ஏற்படுத்தும். பயணிகள் உயிரிழந்தால் அது பெரிய விஷயமாக நாடு முழுவதும் செய்திகள் பரவிவிடும். பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள்.  ஆனால், இதுவே ஒரு விலங்கு உயிரிழந்தால் அதை யாருமே கண்டுக்கொள்ளக்கூட மாட்டார்கள்.

அந்தவகையில், இலங்கையில் கல்லோயா – ஹிங்குரான்கொடை  ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இன்று காலை 3.30 மணியளவில் ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த  விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்ததுடன், மேலும் பல காட்டு யானைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த ரயிலில் இரண்டு எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்துள்ளன. மேலும் நான்கு பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. அத்துடன் ரயில் இயந்திர சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளர் பயணித்த பெட்டிகளும் தடம்புரண்டுள்ளன. இந்த விபத்தால் அந்த வழியாக செல்லும் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளன

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன்  இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து – மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் எண்ணெய் தாங்கிகள் கவிழ்ந்ததில் தண்டவாளத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:
News 5 – (17.10.2024) ரயில் டிக்கெட் முன்பதிவு கால அவகாசம் குறைப்பு!
Train accident

இதுகுறித்து அனுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் கூறுகையில், “காட்டு யானைகள் மோதியதில் ரயில் எஞ்சின்  மற்றும் 4 எரிபொருள் தாங்கிகள் தடம் புரண்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.

அப்படியென்றால், காட்டு யானைகள்தான் ரயில் மீது மோதியதுபோல, ரயில் காட்டுயானைகள் மீது மோதவில்லையாம். என்னடா இது புதுசா இருக்கு?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com