எலான் மஸ்க் டிவிட்டரில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பல வருடங்களாக உள்நுழைவு இல்லாத சுமார் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். அவர் சமீபத்தில் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு என பலவேறு நடவடிக்கைகள் தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் ‘புளூ டிக்கை’ பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு மாத கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் தான் அடுத்த அதிரடியாக விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் , அதாவது பல வருடங்களாக ட்வீட் செய்யாத அல்லது ட்விட்டரில் உள்நுழைவு இல்லாத சுமார் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.