இனி டீசல் கார்கள் படிப்படியாக குறைக்கப்படுமா?

இனி டீசல் கார்கள் படிப்படியாக குறைக்கப்படுமா?
Published on

பொதுவாக டீசல் இன்ஜின் கார்களுக்கு ஆட்டோமொபைல் பிரியர்கள் மத்தியில் விருப்பம் அதிகமாகவே இருக்கும் . ஆனால் சமீபத்தில் ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் தனது புதிய கார்களின் தயாரிப்பில், டீசல் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வருகிறது. இந்த நிலையில் டீசல் கார்கள் உட்பட அனைத்து டீசல் வாகன உரிமையாளர்களை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இச்செய்திகள் உலவி வருகிறது.

மத்திய எண்ணெய் அமைச்சகம் உருவாக்கியுள்ள முக்கியமான அறிக்கையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை அரசு தடை செய்ய வேண்டும் என்றும், 2027 ஆம் ஆண்டிற்குள் மின்சார மற்றும் எரிவாயு-வில் இயங்கும் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

உலகம் முழுவதும் கிளீன் எனர்ஜி-க்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் வேளையில், இதில் முக்கியமாக பாதிக்கப்படும் ஆட்டோமொபைல் துறை நாளுக்கு நாள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

மேலும் அடுத்த 10 வருடத்தில் பெரு நகரங்களில் டீசலில் இயக்கும் பேருந்துகள் இயக்கப்பட கூடாது என்றும் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்த அறிக்கையை மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும், அதுவரையில் இது வெறும் பரிந்துரையாக மட்டுமே இருக்கும்.

முன்னாள் எண்ணெய் வள பிரிவின் செயலாளரான தருண் கபூர் தலைமையிலான குழு தனது அறிக்கையில் டீசல் வாகனங்கள் தடை செய்வது மட்டும் அல்லாமல் 2035 ஆம் ஆண்டிற்குள் internal combustion engine-கள் கொண்ட பைக், ஸ்கூட்டர்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை படிப்படியாக பயன்பாட்டை குறைத்து முழுமையாக பயன்பாட்டை நிறுத்த பரிந்துரைத்துள்ளது.

டீசலில் இயங்கும் வாகனங்களை மாற்ற எத்தனால் கலந்து எரிவாயுவில் இயங்கும் வாகனங்களாக மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் டாக்சி மற்றும் கார் பயன்பாட்டில் 50% எலக்ட்ரிக் கார்களாகவும், மீதமுள்ள 50 சதவீதம் எத்தனால் கலந்து எரிவாயுவில் இயங்கும் வாகனங்களாக மாற்ற வேண்டும் என பரிந்துரை அளிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com