முடிவுக்கு வருமா? ரஷ்யா உக்ரைன் போர்!

ரஷ்யா  மற்றும் உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர்
Published on

ரஷ்யா உக்ரைன் மீதான போரை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக கூறி ஆச்சர்யத்தைக் கிளப்பியிருக்கிறார் ரஷ்ய அதிபர் 'விளாடிமிர் புடின்', நாளை முதல், ஜனவரி 7ஆம் தேதி நள்ளிரவு, வரை, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தச் சொல்லி, தனது பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்குவிற்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 24ம் தேதி, உக்ரைன் மீதான தொடங்கினார் புதின். பதினோரு மாதங்களாக, இரு தரப்பிலும் ஏராளமான, உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதில் உக்ரைனில் பாதிப்புகள் அதிகம். சுகமாய் அமைதியாய் வாழ்ந்திருந்த, உக்ரைன் நாட்டு மக்கள், உடைமைகளை இழந்து, உணவிற்காக, சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கொடுமை.

ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர்

இதிலிருந்து மீண்டுவர, உக்ரைனுக்கு, ஒரு தலைமுறை காலம் தேவைப்படும். இந்த நிலையில் தற்போது புடின் 36மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்ததில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக 'ஆர்ஸ்த்டக்ஸ்' தேவாலயத் தலைவர், 'கிரில், போரை நிறுத்துமாறு ரஷ்யாவைக் கேட்டுக் கொண்டபிறகு, 'கிரெம்ளின்' இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

போர் தொடங்கிய ஆரம்பக்காலத்தில், ரஷயா தீவிரமாகப் போர்புரிந்து, உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றியது. ஆனாலும் உக்ரைன், சரணடையாமல், நேட்டோ நாடுகளின் உதவியுடன் இத்தனை காலமாக, போர் பரிந்து , ரஷ்யாவிற்கு சவாலாக இருந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையே, ஒரு 'சமாதான உடன்படிக்கை'யை ஏற்படுத்தி, போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்த நிலையில்தான் ரஷ்யா முதன் முறையாகப், போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டில் 'ஆட்த்தடாக்ஸ்' கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அந்த மக்களின், மத உணர்விற்கு மதிப்புக் கொடுப்பதோடல்லாமல், அவர்கள் தேவாலயங்கள் சென்று பிரார்த்தனை செய்வதற்கு ஏதுவாகவும், நிம்மதியாக கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதற்கும், இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது என ரஷியா அறிவித்துள்ளது.

கடந்த இருவாரங்களாக, கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடப்பட்ட போதுகூட போர்நிறுத்தத்தை அறிவிக்காத ரஷ்யா, 'ஆர்ஸ்தடாக்ஸ்' கிறிஸ்துமஸ்ஸுக்குப் போரை நிறுத்தியிருப்பது, கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் 'ஜெலன்ஸ்கி' யின் ஆலோசகர், 'மைக்கைலியோ பொடலியாக்', ரஷ்யாவின் போர் நிறுத்ததை நிராகரித்தார். உண்மையான போர்நிறுத்தம் என்றால், உக்ரைனில், ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து, ரஷ்ய துருப்புகள் வெளியேற வேண்டும். இல்லையெனில், 'உங்கள் பாசாங்குகளையெல்லாம் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்' என்று ரஷ்யாவை கிண்டலடித்திருக்கிறார்.

நேற்று துருக்கி அதிபர், 'ஏர்டோகன்' , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போரை முழுமையாக நிறுத்த வேண்டும், என்றுக் கேட்டுக் கொண்டார்.

இந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை, உக்ரைன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள், இது ஏதோ தந்திரம் என்கிற ரீதியில், சந்தேகக் கண்ணோடே பார்க்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com