தலாய் லாமா
தலாய் லாமா

சீனாவுக்குப் போக மாட்டேன்: தலாய் லாமா!

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச, தவாங் எல்லைப் பகுதியில் சீன ராணுவப் படை அத்துமீறி நுழைந்ததாக, இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்குமிடையே மோதல் ஏற்பட்ட, சீன வீரர்கள் விரட்டியடிக்கப் பட்டனர்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ``சீனாவுடனான மோதலில் இந்திய மற்றும்  சீன ராணுவத்தினர் சிலர் காயமடைந்தனர். இருப்பினும் சீனாவின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது" என தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான இந்த மோதல் குறித்து, புத்த மதத் தலைவர் தலாய் லாமாவிடம் கேட்டப்போது அவர் தெரிவித்ததாவது;

சீனாவைவிட இந்தியாவையே நான் அதிகம் விரும்புகிறேன். இது தான் மக்கள் அமைதியாக வாழச் சிறந்த இடம். நான் சீனாவுக்குத் போக மாட்டேன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு,  நான் இமாசல பிரதேசம் காங்க்ராவில் வசிக்க வேண்டும் என விரும்பினார். எனவே, இதுவே எனது நிரந்தரக் குடியிருப்பு இந்தியாவில்தான்.

தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய - சீனப் படைகள் அவ்வப்போது மோதிவரும் நிலையில், இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசித் தீர்க்க வேண்டும் என்று கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com