துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் - என்ன செய்யப்போகிறார், நிதிஷ்குமார்?

துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் - என்ன செய்யப்போகிறார், நிதிஷ்குமார்?

பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை பாட்னாவில் வெற்றிகரமாக நடத்தி முடித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் தொடர்கின்றன. லாலு கட்சியின் எம்.எல்.ஏக்கும் நிதிஷ்குமாருக்கும் நடந்த மோதல் தீர்க்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த அதிர்ச்சி வந்திருக்கிறது.

நில மோசடி புகாரில் பீகாரின் துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதம் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஒருவரை துணை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று பா.ஜ.க களமிறங்கியிருக்கிறது.

பீகார் சட்டமன்றத்தின் முதல் கூட்டம் கூச்சல் குழப்பதோடு ஆரம்பமானது. ஆனால் சில சில நிமிஷங்களிலேயே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. சட்டமன்றத்திற்கு வந்த பா.ஜ.க உறுப்பினர்கள், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.

அமளி துமளியால் பீகார் சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தலைவர் ஜனக் ராம், தேஜஸ்வி யாதவ் உடனே துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அப்போது அவையில் இருந்த நிதிஷ் குமாரும், தேஜஸ்வி யாதவ்வும் அமைதியாக இருந்தார்கள். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்கா, துணை முதல்வர் பதவியிலிருந்து தேஜஸ்வி யாதவ் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு பதட்டத்தை தந்திருக்கிறது. பின்னர் எதிர்க்கட்சிளுடனான கூட்டணி, அதாவது மகாகத்பந்தன் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதிஷ் குமார், அங்கிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்தார். லாலு காட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.எவை நிதிஷ் குமார் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பா.ஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இது குறித்து அண்மை மாநிலத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர்களை சந்தித்து வந்தார். மேற்கு வங்கத்திற்கு சென்று மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். ஒடிசாவுக்கு போய் நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.

கார்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் நிதிஷ்குமாரின் முயற்சிகளுக்கும் வெற்றி கிடைத்தது. முதல் முறையாக பாட்னாவில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். ஆனால், அடுத்த கூட்டத்தை நடத்த முடியாத அளவுக்குஅடுத்தடுத்து சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருககின்றன.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியைப் போல் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. செந்தில் பாலாஜியை விட பவர்புல்லான லாலுவின் மகனான தேஜஸ்வியாதவை நிதிஷ்குமார் விட்டுக்கொடுக்கமாட்டார் என்று பாட்னா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com