இனி தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களுக்கு அதிக மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டிற்கு தயாராகி வருகிறார்கள். 2022-2023 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவில்லை என்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்
இந்த நிலையில் தான் நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்றும் ,மாணவர்களுக்கு மன அழுத்தம், தேர்வுத்துறைக்கு பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தீவிரமாக ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக 11-ம் வகுப்பு பாடங்களையே நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை நேரடியாக தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தினால் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால் 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணத்தினால் கல்வித்துறை இது குறித்து யோசித்திருக்கலாம் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ இனி 11 பொது தேர்வு நிறுத்தப்படுமா? என்பது மாணவர்களின் பொதுமக்களின் கேள்வியாக எதிர்பார்ப்பாக இருக்கிறது.