#BREAKING: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது..!!

உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi
Updated on

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று (ஆகஸ்ட் 3) தஞ்சாவூரில் நடந்த போராட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து விமர்சனம் செய்துள்ளார். இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தவெக-வினருக்கு பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன.

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டைச் சுற்றி போலீஸார் குவிந்துள்ளனர். உதயநிதியை சந்திக்க வழக்கறிஞர்கள் வந்த நிலையில், அவர்களை வீட்டின் உள்ளே செல்ல தவெக-வினர் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் போலீஸார் உதயநிதி குடும்பத்தினர் மற்றும முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக எல்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்தது போல், உதயநிதியையும் கைது செய்ய வேண்டும் என தவெகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எல்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று தான் இவருக்கு நிமந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் மற்றுமொரு திமுக எம்எல்ஏவும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதக மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெண்களை பற்றி அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது தஞ்சை கிழக்கு காவல் நிலையம்.

இதையும் படியுங்கள்:
என்ன நடக்கிறது பனையூரில்? அவசர அவசரமாக கூடும் தவெக எம்எல்ஏக்கள்.!
உதயநிதி ஸ்டாலின்

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரை முடக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை என திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குறைஞர் அசன் முகமது ஜகன்னா முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக கருதி பிற்பகலில் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 தற்போது உதயநிதி ஸ்டாலினை தஞ்சை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். அவரை விசாரணைக்காக தஞ்சை அழைத்துச் செல்லப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com