ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான ஒன்று - ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்!

Rbi Governor Shaktikanta Das
Rbi Governor Shaktikanta Das
Published on

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறை தான் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரூ.2,000 நோட்டுகளை மாற்ற போதிய கால அவகாசம் உள்ளதால் மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறை தான் . 2005-க்கு முன் அச்சான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும், எனவே அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் உடனடி தேவைக்காகவே ரூ.2,000 நோட்டுகள் வழங்கப்பட்டன. உயர்மதிப்புள்ள ரூ.2,000, ரூ.500 நோட்களில் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை. ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் ரூ.3.62 லட்சம் கோடியாக குறைந்ததால் நோட்டுகளை திரும்பப் பெற்றோம். ரூ.2,000 நோட்டுகளை மாற்ற போதிய கால அவகாசம் உள்ளதால் மக்கள் அவசரப்பட வேண்டாம். வங்கிகளில் குவிய வேண்டாம். செப்டம்பர் 30-க்குப் பிறகும் இந்த நோட்டுக்கள் சட்டப்படி செல்லக்கூடியதாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ஆா்பிஐ உத்தரவிட்டுள்ளது. மற்ற ரூபாய் நோட்டுகளின் கையிருப்பு, மக்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com