சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டதா?

Toll
Toll

ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டண உயர்வு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

முக்கிய நகரங்களுக்கு இடையில் எளிதாகவும் விரைவாகவும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக சுங்கச்சாவடிகள் உள்ளன. இதனால் பாதுகாப்பாகவும் வெவ்வேறு நகரங்களுக்குச் செல்லலாம். இந்த சாலைகளில் பயணிக்க சுங்கச் சாவடிகளில் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆனாலும் சாலை வரிகள் கட்டும்போது எதற்காக இந்த சுங்கச் சாவடிகள் என்பது போன்றக் கேள்விகள் எழுந்தவண்ணம்தான் உள்ளன.

இதனால் மக்கள் இதுதொடர்பான அதிருப்திகளைத் தெரிவித்து வருகின்றனர். அதுவும் நாடு முழுவதும் கூடுதலான சுங்கச் சாவடிகள் இருக்கின்றன என்றும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மேலும் அதனை நீக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் திமுக கட்சி உட்பட சில கட்சிகளும் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை நீக்கக்கோறியும் தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில்தான் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதலும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் முதலும் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு கட்டணம் என்பது 5 சதவீதம் முதல் 10 சதவீதமாகும்.

சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், இன்று காலை பயணிகளிடம் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் இந்தக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். லோக்சபா தேர்தல் முடியும் வரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்தாண்டு ஜூன் மாதம் வரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
திருவனந்தபுரம்: மத்திய அமைச்சரின் வேட்புமனு தாக்கலுக்கு பணம் கொடுத்த கல்லூரி மாணவர்கள்!
Toll

அதேபோல் நேற்று இரவு சுங்கச்சாவடிகளுக்கு ஒரு அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில் சுங்கச்சாவடிகளின் பழைய கட்டணத்தையே வசூலிக்கும்படியும் தேர்தலுக்கு பிறகு உயர்த்திக்கொள்ளலாம் என்றும் அறிக்கையில் இருந்தது.

மேலும் தமிழகத்தில் மொத்தம் 7 சாவடிகளில் கட்டணம் உயர்த்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் வாகன ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். மேலும் இந்த சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com