44 கிலோ எடையை அசால்டாக குறைத்த பெண்.. அதுவும் சாக்லேட், உருளைக்கிழங்கு சாப்பிட்டு!

Weight loss tips.
Weight loss tips.

மாறிப்போன நம்முடைய உணவுக் கலாச்சாரத்தால் பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி பாதிக்கப்பட்டு உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் அதற்கு பல உணவு கட்டுப்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். 

ஆனால் தனக்கு பிடித்த பாஸ்தா, சாக்லேட், உருளைக்கிழங்கு போன்றவற்றை சாப்பிட்டே ஒரு பெண் 44 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். அது எப்படி சாத்தியமானது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இங்கிலாந்தைச் சேர்ந்த டான் ஜேம்ஸ் என்ற பெண்மணி, நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பாஸ்தா, சாக்லேட் ஆகிய உணவுகளை சாப்பிட்டு 44 கிலோ குறைத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு தனது தோழியின் திருமணத்தில் டாம் ஜேம்ஸ் மணப்பெண் தோழியாக அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அப்போது அவருடைய எடை 123 கிலோவாக இருந்ததால் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என எண்ணிய டாம், ‘ஸ்லிம்மிங் வேர்ல்ட்’ என்ற எடையிழப்புத் திட்டத்தில் சேர்ந்து, தன் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கினர். 

அந்தத் திட்டம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரியைப் பற்றி கவலைப்படாமல் விரும்பும் உணவை சாப்பிட அனுமதித்தது. அதில் பெரும்பாலும் குறைந்த கலோரியில் இருக்கும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளே அடங்கியுள்ளது. அந்த உணவுத் திட்டத்தில் டாம் ஜேம்ஸ்க்கு விருப்பமான உருளைக்கிழங்கு, சாக்லேட், பாஸ்தா, போன்ற உணவுகள் இருந்ததால், அவற்றை மட்டுமே சாப்பிட்டு சுமார் 44.5 கிலோ எடையைக் குறைத்துள்ளார். 

இதையும் படியுங்கள்:
உடல் எடை குறைய உண்ண வேண்டிய ஐந்து வகை உணவுகள் என்னென்ன தெரியுமா?
Weight loss tips.

இப்போது அவருடைய எடை 79 கிலோவாக இருக்கிறது. குறிப்பாக அவரது உணவுத் திட்டம் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. உணவகத்திற்கு செல்வதாக இருந்தாலும் அங்கு சென்றால் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முன்கூட்டியே நிர்ணயம் செய்து வந்துள்ளார். 

எனவே அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, குறைந்த கலோரி அடங்கிய உணவுகளை எடுத்துக் கொண்டதன் மூலமாக மட்டுமே, தன் உடல் எடை குறைந்ததாக அவர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com