#BREAKING : பெண்கள் சமையலறையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் நேரம் இது - பிரதமர் மோடி பெருமிதம்..!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on

மக்களவையில் மகளிர்க்கான இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அரசியல் சாசன திருத்த மசோதா இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில் இதை ஆதரித்தும் எதிர்த்தும் நாடாளுமன்ற எம்பிக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி உள்ளனர். மசோதா மீதான உரையை தற்போது மோடி பிரதமர் மோடி நிகழ்த்தினார் அதிலிருந்து சில தோழிகள் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் பின்னடைவிலிருந்து நீண்ட காலம் நீள முடியாது. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால் நாடு மேலும் வலிமை பெறும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவுக்கு பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவு தந்துள்ளனர். நாட்டிற்கு புதிய திசையை காட்டும் தேசத்தின் முக்கியமான தருணம் இது. வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் இருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம் .

புதிய வரலாறு படைக்க நாடாளுமன்றத்திற்கு பொன்னான நாள் இன்று . மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு பங்களிப்பதை பாக்கியமாகப் பார்க்கிறேன் .

2024 ம் வருடம் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இப்போது இந்த மசோதாவை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். இதை எதிர்த்தவர்களை ஏற்கனவே பெண்கள் நிராகரித்துவிட்டனர் .

இந்த மசோதா காலத்தின் கட்டாயமாகும் .மசோதாவை அனைவரும் ஆதரித்தால் யாருக்கும் அரசியலில் பலன் கிடைக்காது. அரசியல் ரீதியான பலனுக்கு மகளிர் ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வரவில்லை.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது இந்த மசோதா . இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் வரலாறு ஒருபோதும் நம்மை மறக்காது. இந்த மசோதாவுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. இதை அனைவரும் ஆதரித்தால் யாருக்கும் அரசியல் பலன் கிடைக்காது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வந்துள்ளது ஆகவே மகளிரிடம் ஒதுக்கீடு மசோதா மிக முக்கியமானது.

30 வருடங்களில் லட்சக்கணக்கான பெண்கள் தலைவர்களாகி உள்ளனர். நாடாளுமன்றத்தில் தங்கள் பங்கை பெண்கள் தற்போது கேட்கின்றனர் பெண்களுக்கு அதிகாரம் கிடையாது என்பவர்களை காலம் ஒருபோதும் மன்னிக்காது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த பிரதமராகி உள்ளவன் நான் நாட்டைக் கட்டமைப்பதில் இனி பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவது நமக்கு பெருமை.

இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர் வீட்டு வேலைகளில் உள்ள பெண்கள் சட்டமன்றம் நாடாளுமன்றம் வரும் நேரம் இது. நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்படுகிறது பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை தடுக்க நாம் யார்?

பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது நாடாளுமன்றத்திலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். எல்லா வகையிலும் வலிமையை நிரூபித்த பெண்களின் உரிமைகளை நாம் ஏன் தடுக்க வேண்டும்?

மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பெண்கள் இட ஒதுக்கீட்டால் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையாது தொகுதி மறு வரையறை எனும் பெயரில் மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு சிலர் இடையூறு தருவதாகவும் விளக்கமளித்த மோடி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மத்திய அரசுக்கு எதிராக தென்னிந்தியா போர்க்கொடி! 5 மாநில முதல்வர்கள் 'எக்ஸ்' (X) தளத்தில் கடும் கண்டனம்..!
பிரதமர் மோடி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com