பெண்கள் மட்டும் பங்கேற்கும் குடியரசு தின அணிவகுப்பு!

பெண்கள் மட்டும் பங்கேற்கும் குடியரசு தின அணிவகுப்பு!

வ்வொரு வருடமும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்தியாவின் ராணுவ வலிமையையும், கலாசார பெருமையையும் பறைசாற்றும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. மாநிலங்களின் கலாசார, பாரம்பரியத்தை விளக்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இதில் இடம் பெறுகின்றன. அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையின் பெயர், 'கடமைப்பாதை' என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்திய ஆயுதப் படைகளில் மத்திய அரசு பெண்களுக்கு முக்கியப் பங்கு அளித்து வருகிறது. சமீபத்தில், பீரங்கி படையில் ஐந்து பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். சென்ற சில ஆண்டுகளில், குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் மட்டுமே இடம்பெற்ற சில குழுக்கள் பங்கேற்றுள்ளன. ஆண்கள் இடம்பெற்ற குழுவுக்கு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கி உள்ளனர்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், முற்றிலும் பெண் குழுக்களையே பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதையடுத்து பெண் குழுக்களை மட்டும் பங்கேற்க வைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபோன்று முழுவதும் பெண்கள் அணிவகுத்து செல்லும் குழுக்களிலும், பாண்டு வாத்திய குழுக்களிலும், அலங்கார ஊர்திகளிலும் முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இதர கலாசார நிகழ்ச்சிகளிலும் பெண்களே இடம் பெறுவார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக முப்படைகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ராணுவ அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com