துர்கா பூஜையின்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்கள்!

ஜல்பைகுரி ஆற்றில்
ஜல்பைகுரி ஆற்றில்

 நவராத்திரி பண்டிகையையொட்டி, வட மாநிலங்களில் துர்கா பூஜை பிரபலமாக நடத்தப்படுகிறது. இப்பண்டிகையின் இறுதி நாளான நேற்று மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் துர்கா சிலைகளை ஆற்றில் கரைக்க ஏராளமான பெண்கள் சென்றனர். அப்போதுஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அப்பெண்கள் அடித்து செல்லப்பட்டனர்.

 இந்நிலையில் இதுவரை  7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜல்பைகுரி போலீஸார் தெரிவித்ததாவது:

 ஆற்றில் அடித்து செல்லபட்ட  பலரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆற்றில் சிக்கி இறந்த பல பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.

 -இவ்வாறு ஜல்பைகுரி போலீசார் தெரிவித்தனர்.

 இந்நிலையில், துர்கா பூஜை சிலையை ஆற்றில் கரைக்க சென்ற பெண்கள் மொத்தமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com